சினிமா

பிரபல தமிழ் நடிகரின் வீட்டில் ஒட்டப்பட்ட தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கர்.!

ராதாரவியின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்தனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் 4வது கட்ட ஊரடங்கு இருக்கும் என்றும் பிரதமர் மோடி நேற்றைய உரையில் அறிவித்திருந்தார். சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. அது மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும், பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்தவர்களையும்  […]

HEALTH DEPARMENT 4 Min Read
Default Image

கௌதம் மேனனின் குறும்படத்தில் சிம்பு நடிக்கிறாரா.?

கௌதம் மேனனின் குறும்படத்தில் சிம்புவும்  இந்த குறும்படத்தில் நடித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் ஐபோனில் குறும்படம் ஒன்றை எடுப்பது எவ்வாறு என்று சொல்லி கொடுக்கும் வீடியோவை திரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்ததார். அதனை தொடர்ந்து நேற்றைய முன்தினம் அந்த குறும்படத்தின் டீசரை கௌதம் மேனன் வெளியிட்டார். அதற்கு “கார்த்திக் டயல் செய்த எண்” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில் திரிஷா கார்த்திக் என்பவருடன்  போனில் பேசுவது போன்ற காட்சியாகும் . […]

#simbu 4 Min Read
Default Image

டிக்டாக் மூலம் ரூ.5 கோடி நிதி திரட்டிய பிரபல நடிகை!

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக டிக்டாக் மூலம் ரூ.5 கோடி நிதி திரட்டிய நடிகை ஊர்வசி. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். மக்கள் வெளியே வேலைக்கு செல்ல இயலாமல் தவித்து வருகிற நிலையில், ஒரு வேலை உணவிற்கு கூட வழியில்லாமல் பலர் தவித்து வருகின்றனர்.  இந்நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை […]

coronavirus 3 Min Read
Default Image

ஊரடங்கில் தமிழ் பயிலும் பிரபல பாலிவுட் நடிகை.!

 நிதி அகர்வால் தமிழ் மொழியை கற்பதாக கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நிதி அகர்வால், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் தற்போது தமிழிலும் களமிறங்கியுள்ளார். ஆம் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் லட்சுமணன் இயக்கும் பூமி படத்தில் நிதி அகர்வால் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஜெயம் ரவி நடிக்கிறார். டி. இமான் இசையமைக்கும் இந்த படத்தில் ரோனித் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா […]

Nidhhi Agerwal 4 Min Read

மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும்.!முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த உலகநாயகன்.!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வித்தியாசமான முறையில் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.   தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பிறந்தநாளை நேற்று கொண்டாடும்  வகையில் பிரதமரும், குடியரசுத் தலைவர் உட்பட பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், பிரமுகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர் . அந்த வகையில் நடிகரும் , மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வித்தியாசமான முறையில் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.  அதில், தமிழகத்தின் […]

#KamalHaasan 4 Min Read
Default Image

நீங்கள் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக இருக்க வேண்டும்.! எடப்பாடியாருக்கு பவன்கல்யாணின் பிறந்தநாள் வாழ்த்து.!

பவன் கல்யாண் தமிழக முதல்வருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று  பிறந்தநாளை கொண்டாடும்  வகையில் பிரதமரும், குடியரசுத் தலைவர் உட்பட பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், பிரமுகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதல்வருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

CM Palaniswami 5 Min Read
Default Image

80ஸ் ஹீரோயின்கள் ஒரே படத்தில்.! படத்தின் பெயர் என்ன தெரியுமா.!

1980-களில் இந்த நான்கு நாயகிகளின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு திரைப்படங்களில் நால்வரின் கதா பாத்திரத்தை கதைக்களமாக  கொண்டும், தற்போதைய வாழ்வை அடித்தளமாக கொண்டும் உருவாக்கப்பட்டுள்ள ஒரு குடும்ப திரைப்படமாகும் . 80ஸ் ஹீரோயின்கள் என்றால் நமக்கு நினைவில் வருவது ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுஹாசினி உள்ளிட்ட பலர். தற்போது இவர்கள் நால்வரும் ஒரே படத்தில் இணைகிறார்கள். இசையமைப்பாளரான  ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைக்கும் இந்த படத்தை மிராக்கிள் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, […]

#Kushboo 4 Min Read
Default Image

பிரதமரின் திட்டம் நடுத்தர, அடித்தட்டு மக்களுக்கு பலனளிக்குமா.? கமல்ஹாசன் டுவிட்.!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி நேற்றைய தினம் டிவி வாயிலாக மக்களிடம் உரையாற்றுகையில் இந்தியாவில் 4ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், ஆனால் அந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் அறிவித்திருந்தார். மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், இந்த திட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்றும், இந்தியா மற்ற நாடுகளின் உதவியின்றி தன்னம்பிக்கை கொள்ள வைக்கும் என்றும் […]

#KamalHaasan 5 Min Read
Default Image

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தின் புதிய அப்டேட்.!

ஜோதிகாவின் பொன்மகள் வந்தா ரம்ஜான் அன்று வெளியிட இருப்பதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் […]

jothika 3 Min Read
Default Image

தல மற்றும் தளபதி சேர்ந்து நடிக்காததற்கு காரணம்.! அஜித் கூறிய விளக்கம்.!

விஜய் மற்றும் அஜித் சேர்ந்து நடிக்காததற்கு தல அஜித் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் அவர்கள் ரஜினிக்கு இணையாக சினிமாயுலகில் வளர்ந்து நிற்பவர். அதை போன்று இவர்களுக்கென்று மிகப் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டவர்.இவர்களின்படம் ரிலீஸ் என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். விஜய் அவர்கள் சமீபத்தில் மாஸ்டர் விழாவில் கூட நண்பர் அஜித் என்று கூறியது மிகவும் டிரெண்டானது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து […]

#Ajith 4 Min Read
Default Image

காதலில் விழுந்த பாகுபலி பட வில்லன்.! புகைப்படத்துடன் இதோ.!

ராணா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணிடம் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, அந்த பெண் எனக்கு யெஸ் சொல்லி விட்டார் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். தென்னிந்திய சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்றது பாகுபலி திரைப்படம். எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015ல் பாகுபலி படத்தின் முதல் பாகமும், 2017ல் பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் மிகப் பெரும் வசூல் ரீதியாகவும் சாதனையை படைத்தது. இதில் முக்கிய வேடங்களில் பிரபாஸ், ராணா […]

Rana Daggubati 3 Min Read
Default Image

‘வலிமை’ படத்துடன் மோதும் ‘அண்ணாத்த’ ! சபாஷ் சரியான போட்டி !

அஜித் நடித்த வலிமை படத்துடன் மோதுகிறது ரஜியின் அண்ணாத்த படம்.  சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் “அண்ணாத்த”. இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.  கொரோனா வைரஸ் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “அண்ணாத்த” […]

Actor Rajinikanth 2 Min Read
Default Image

கொரோனா தடுப்பு நிதியாக நன்கொடை வழங்கிய பிரபல பாலிவுட் நடிகை.!

கொரோனா தடுப்பு நிதியாக   பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரயுடெலா நிதியுதவி வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். அதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள பிரபலங்கள் அடங்கும். இந்த நிலையில் தற்போது ஒரு பெரிய தொகையை கொரனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பிரபல பாலிவுட் […]

corona donation 3 Min Read
Default Image

நிஜ ஹீரோக்களிடம் கையொப்பம் வாங்கி நெகிழ வைத்த சூரி.!

மருத்துவ ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் போன்ற நிஜ ஹீரோக்களிடம் கையெழுத்து வாங்கி அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் சூரி.  தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3ஆம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளோடு அமலில் உள்ளது. இதனால் குறிப்பிட்டதக்க வகையில் மக்கள் தங்கள் வேளைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர். ஆனால், ஊரடங்கு கடந்த மார்ச் 24ஆம் தேதி அமலில் இருந்ததில் இருந்து மருத்துவ ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட 24 மணிநேரமும் பொதுமக்களை […]

coronavirus 3 Min Read
Default Image

ஒரே போன்காலில் 11பெண்களை காப்பாற்றிய தளபதி விஜய்.!

தளபதி விஜய் ஒரே போன்காலில் 11பெண்களை காப்பாற்றியுள்ளார். சென்னையை சேர்ந்த தேவிகா உட்பட அவரது குடம்பத்தை சேர்ந்த 11பெண்கள் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். அப்போது திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவர்களால் ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனையடுத்து  கைகளில் இருந்த காசுகள் அனைத்தையும் செலவாக்கிய இவர்கள் பேருந்து நிலையங்களிலும், கோவில்களிலும் தங்கியிருந்து நாட்களை கழித்து வந்தனர். அதனையடுத்து சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடிய இவர்கள் தூத்துக்குடியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி […]

#ThalapathY 4 Min Read
Default Image

காவல்துறையினரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய பிரபல நடிகர்!

காவல்துறையினரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய நடிகர் சூரி.  கொரோனா வைரஸின் தீவிர பரவலால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் தான் மக்கள் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களை காக்கும் பணியில், காவல்துறை அதிகாரிகள் மிக தீவிரமாக  இறங்கியுள்ளனர். இந்நிலையில், நடிகர் சூரி திருவல்லிக்கேணி காவல்நிலையத்திற்கு நேரில் சென்று, காவல்துறை அதிகாரிகளை பாராட்டி, அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார். மேலும், பல சினிமா பிரபலங்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் வீடியோ வெளியிட்டுள்ளது […]

#Police 2 Min Read
Default Image

அன்பின் மகத்திற்கு மகத்தான மனசு! – இயக்குனர் சுரேஷ் காமாட்சி

நடிகர் மகத்தை பாராட்டி ட்வீட்டர் பக்கத்தில் இயக்குனர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவு. இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால், சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கால் சினிமா தொழிலாளர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால், நடிகர் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குனர் […]

coronavirusindia 3 Min Read
Default Image

யானையுடன் பிக் பாஸ் ரைசா வில்சன்! வைரல் புகைப்படம் உள்ளே!

நடிகையும் மாடல் அழகியுமாகிய ரைசா வில்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் யானையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.  வேலையில்லா பட்டதாரி எனும் தனுஷ் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் ரைசா வில்சன். அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமாகினார். தனது அழகிய புகைப்படங்களை இணைய தள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்ட இவர், தற்பொழுதும் தனது அட்டகாசமான புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக […]

#BiggBoss 2 Min Read
Default Image

கிடைக்கும் கேப்பில் கொம்பனாக மாற உள்ள கார்த்தி.!

மீண்டும் கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார்.  தமிழ் சினிமாவில் பல நல்ல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே நல்ல நடிகராக வலம் வருகிறார் நடிகர் கார்த்தி. இவர் கடைசியாக நடித்த கடைக்குட்டி சிங்கம், கைதி, தம்பி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  இதில் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் […]

#ManiRatnam 3 Min Read
Default Image

15 வயது பெண்ணை ஈவு இரக்கமின்றி தீயிட்டது பெரும் சோகம்! சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும் – நடிகர் விவேக்

15 வயது பெண்ணை ஈவு இரக்கமின்றி தீயிட்டது குறித்து ட்வீட்டரில் பதிவிட்ட நடிகர் விவேக். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான ஜெயஸ்ரீ என்ற சிறுமியை, சிறுமியை தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிற நிலையில், […]

jeyasree 2 Min Read
Default Image