காஞ்சிபுரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.காஞ்சிபுரத்தின் திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், கேளம்பாக்கம் போன்ற பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழையும், செங்கல்பட்டு, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ஆயினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் […]
3 மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகளை கண்காணிக்க ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.எனவே தொடர் மழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு, அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தமிழகமெங்கும் காய்ச்சல் பரவி வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். நெய்க்குப்பி கிராமத்தை சேர்ந்த பழனி, இவருக்கு வயது 45. இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்சமய நூல்களில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும்.இந்த கோவிலில் சிலை செய்வதில் முறைகேடு நடந்துள்ளது.இதற்கு அரசு அதிகாரியே துணை போயிருப்பது அவலத்தின் உச்சம். ஏகாம்பரநாதர் கோயில் பல்லவர் காலத்தில் சிறப்பு வாய்ந்தாக கருதப்படும் இந்தக்கோயில் இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட பிரசிதிபெற்ற கைலாசநாதர் கோயிலுக்குப் பின் எழுந்தது.இந்த கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையதாக கருதப்படுகின்றது.அத்தகைய பிரசிபெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை முறைக்கேடு நடந்துள்ளது. காஞ்சிபுரம் புகழ்பெற்ற இந்த ஏகாம்பரநாதர் கோவில் […]
காஞ்சிபுரத்தில் உள்ள பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 3 ஊழியர்கள் பட்டாசு குடோனில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் போது தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தேமுதிகாவின் 14-வந்து ஆண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஆனகாத்தூர் அம்மன் கோயில் திடலில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் விஜயகாந்தின் மூத்த மகன் கலந்துகொள்ளவுள்ளார். இவருக்கு அரசியல் மேடை என்பது இது தான் முதல் முறை என்பதால் அனைவரும் மிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இது அக்கட்சியின் […]
தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டில் 80 சிலைகள், கோயில்தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 27 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சோதனை நடத்தி 4 ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 89 சிலைகளை பறிமுதல் செய்தனர்.இந்த சோதனையை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் செய்து பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து, ரன்விர் ஷாவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் அருகே மோகல்வாடியில் தொழிலதிபர் ரன்வீர் […]
கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் அருகே இன்று காலை மணல் லாரி மோதியதில் கல்லூரி மாணவி பரிதாபமாக பலியானார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 7 லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம் அடுத்த ஆதனூர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவரது மனைவி கண்மணி. ஊரப்பாக்கத்தில் ஒரு தனியார் பள்ளியில் கண்மணி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சரண்யா (எ) சூலமெட்டி சேரன், […]
காஞ்சிபுரம் அருகே 200ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலமரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சோகண்டி கிராமத்தில் 200ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலமரம் சாலையில் விழுந்தது.இதனால் சுங்குவார்சத்திரம் – திருவள்ளூர் , சுங்குவார்சத்திரம் – காஞ்சிபுரம் ஆகிய சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டது. சாலையில் விழுந்துள்ள ஆலமரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் அனாதையாக கைவிடப்பட்ட அமெரிக்க பெண்மணியை அரை நிர்வாண கோலத்தில் காவல்துறையினர் மீட்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க கேலா மரீன் நெல்சன் என்ற பெண்மணிக்கும் சென்னை வேளச்சேரி பகுதியில் இருக்கக்கூடிய மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விமல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு நிறுவனத்திலிருந்து விமல் வேலை இழந்துள்ளார். அவருடைய மனைவியான கேலா மரீன் நெல்சன் […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும்,மத்திய அரசை கண்டித்தும் நாடு முழுவதும் அகில இந்தியா காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் போட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.இந்த அழைப்பினை ஏற்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரி கட்சிகள் அனைத்தும், ஆதரவு தெரிவித்து இந்த பாரதபந்த்தில் இன்று கலந்துகொண்டனர். அதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் […]
காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர் ஒருவர் மீது அரிவாளால் சரமாரியாக கொலை வெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவக்குமார் (26) என்பவர் மீது 6-பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். வழக்கறிஞர் சிவக்குமார் (26) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இரு சக்கர வாகனங்களை மாட்டுவண்டியில் ஏற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இரு சக்கர வாகனங்களை மாட்டுவண்டியில் ஏற்றி […]
காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் தனியார் பயணிகள் பேருந்தும் தனியார் தொழிற்சாலை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் தனியார் பயணிகள் பேருந்தும் தனியார் தொழிற்சாலை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது .இந்த விபத்தில் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் .விபத்தில் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .இந்த விபத்து குறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மெழுகு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நேற்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காஞ்சிபுரத்திற்கு வருகைதந்த ஆவர் காஞ்சி சங்கர மடத்தில், மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மெழுகு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேலும் காஞ்சி மஹா பெரியவர் பிருந்தாவனத்தில் அவரது பாதத்திற்கு பிரணாப் முகர்ஜி பூஜை செய்து வழிப்பட்டார்.
காஞ்சிபுரத்தில் பாமகவினர் வனப்பகுதியில் குப்பை கொட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். காஞ்சிபுரத்தில் செங்கல்பட்டு அடுத்த கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வனபகுதியில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் 100-க்கும் மேற்பட்டோர் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிற்கு பிரம்ம குமாரிகள் அமைப்பினர் ராக்கி கயிறு கட்டி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.இந்நிலையில் சகோதரத்துவத்தின் பெருமையை உணர்த்தும் ரக்ஷா பந்தன் விழாவையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிற்கு பிரம்ம குமாரிகள் அமைப்பினர் ராக்கி கயிறு கட்டி இனிப்புகள் வழங்கி தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். DINASUVADU
காஞ்சிபுரத்தில் பழமையான பொருட்கள் திருடி செல்லப்பட்டுள்ளது. சின்ன காஞ்சிபுரம் பங்காரம்மண் தெருவில் அமைந்துள்ள சக்கரத்தாழ்வார் பஜனை கூடத்தின் பூட்டை உடைத்து பழமையான சக்கரத்தாழ்வார் செம்பு பட்டயம் மற்றும் செம்பு பித்தளையிலான பூஜை பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது .பின்னர் இந்த சம்பவம் குறித்து விஷ்ணுகாஞ்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். DINASUVADU
காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி இயங்கிவந்த மதுபான பார்க்கு சீல் வைக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் 10-க்கும் மேற்பட்ட மதுபான பார்கள் அனுமதி இன்றி இயங்கி வந்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையம், மார்கெட், சின்ன & பெரிய காஞ்சிபுரம், செவிலிமேடு, ஆகிய பகுதிகளில் அரசு டாஸ்மாக் கடைகளில் அனுமதியின்றி இயங்கி வந்த 10-க்கும் மேற்பட்ட மதுபான பார்க்கு சீல் வைத்து சென்னை மண்டல டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். DINASUVADU
காஞ்சிபுரம் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை அடித்துயடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வள்ளுவப்பாக்கம் என்ற இடத்தில் ஸ்ரீ பச்சையம்மன் கோயில் உள்ளது.இந்த கோயிலில் நேற்று முன்தினம் இரவு உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது.இதில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பணம் கொள்ளையடிக்கபட்டுள்ளது.இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். DINASUVADU