தமிழ்நாடு

காவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா? இன்றைய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முக்கிய முடிவு!

காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால், இன்றைய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை அம்மாநில அரசு தரவில்லை என்பதால், தமிழக அரசு தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் மூலமாகவும், மத்திய […]

4 Min Read
Cauvery River

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி, தஞ்சாவூர், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஆகஸ்ட் 30, 31 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் […]

3 Min Read
IMD Rain TN Puducherry

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று (ஆகஸ்ட் 29-ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆண்டுதோறும் இந்த பேராலயத்தில் பெருவிழா நடப்பது வழக்கம், இன்று தொடங்கி 10 நாட்கள் திருவிழாவையொட்டி வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வருகை தருவதால்,  நாகப்பட்டினம் மாவட்டம் விழாக்கோலம் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், 4 மாவட்டங்களை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

2 Min Read
Velankanni Temple

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!

சென்னையின் மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவல்லிக்கேணி, பிராட்வே, தேனாம்பேட்டை, கிண்டி, பட்டினப்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை பெய்து வருகிறது. மேலும்,  சைதாப்பேட்டை, கிண்டி, நந்தனம், தேனாம்பேட்டை, தி.நகர், மேற்கு மாம்பலம், அசோக் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காலை 8 மணி வரை தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சி, […]

2 Min Read
Tamilnadu rains

ஓணம் பண்டிகை: இந்த மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை!

ஓணம் பண்டிகையை தென்தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். இந்நாளில் கேரளாவில் மட்டும் இந்த சிறப்பு நாளை கொண்டாட படுவதில்லை, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இந்நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி என மொத்தம் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட் 29ம் […]

5 Min Read
onam festival in tamilnadu

மோடி என்றால் அதானி, அதானி என்றால் மோடி – காங்கிரஸ்

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு  கிரீஸ் நாட்டுற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் கிரீஸ் நாட்டு பயணம் குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், ‘பிரதமர் மோடி தனது கிரீஸ் பயணத்தை முடித்துவிட்டு திரும்பியிருப்பது உங்களுக்குத் தெரியும், அங்கு அவர் கிரீஸ் துறைமுகங்களிலும் ஆர்வம் காட்டினார். இப்போது செய்தி என்னவென்றால்… கிரீஸ் துறைமுகத்தை அதானி […]

3 Min Read
congress

இந்த தேர்வின் முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு..!

தாலுகா காவல், சிறப்பு காவல்படை, ஆயுதப்படை எஸ்.ஐ பணிகளுக்கு நடந்து முடிந்த எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக, காவல் துறை சார்பு ஆய்வாளர்கள் மற்றும் நிலைய அதிகாரிகள், தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறைக்கான ஒருங்கிணைந்த தேர்வு – 2023க்கான அறிவிக்கை 05.05.2023 மற்றும் 23.05.2023 அன்று வெளியிடப்பட்டது. இதில் சார்பு ஆய்வாளர் தாலுகா, […]

4 Min Read
POLICE

அதிமுக 2,3 தரப்பு என சொல்ல முடியாது..! அதிமுக என்பது இனிமேல் ஒன்றுதான்..! – எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்று சாதனை படைத்துள்ளோம். பிரச்சனை இன்றி மாநாட்டை நடத்தி அதிமுக கட்டுக்கோப்பானது என்பது நிரூபித்துள்ளோம். அதிமுக என்பது இனிமேல் ஒன்றுதான், எங்கள் தரப்பு தான் உண்மையான அதிமுக. அதிமுக மாநாட்டை பார்த்து பொறாமை அடைந்து சேலத்தில் திமுக மாநாட்டை நடத்துகிறது. 15 லட்சம் பேர் வந்த அதிமுக மாநாட்டிற்கு போதிய பாதுகாப்பை […]

3 Min Read
ADMK Chief Secretary Edapadi Palanisamy

ஒரு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும்.! காவேரி ஒழுங்காற்று குழு பரிந்துரை.!  

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய காவேரி நீரை அம்மாநில அரசு தரவில்லை என்பதால், தமிழக அரசு தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. காவேரி மேலாண்மை வாரியம் மூலமாகவும், மத்திய அரசு மூலமாகவும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் பெயரில் அமைக்கப்பட்ட காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவின்படி, காவேரியில் இருந்து கடந்த 4 மாதங்காளாக தமிழகத்திற்கு கர்நாடக அரசு தரவேண்டிய தண்ணீர் அளவானது, ஜூன் மாதம் 9 டிஎம்சி, ஆகஸ்ட் […]

5 Min Read
Cauvery River

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத்தொகை – முதலமைச்சர் உத்தரவு

தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கான குறைந்தபச ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையினையும் சேர்த்து வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதிய ஆதார விலை, மாநில அரசின் ஊக்கத்தொகையை செப்.1 முதல் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதில், சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.82, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.107 கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்க  செய்துள்ளது. அதன்படி, சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,265, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,310 எனவும் நேரடி […]

4 Min Read
Tamilnadu CM MK Stalin

நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க 3 கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு.! முதல்வர் அறிவிப்பு .!

அறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் இருந்தே தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை கோட்பாடு தான் புழக்கத்தில் உள்ளது. தாய்மொழியான தமிழ் மற்றும் அலுவலக மொழியாக ஆங்கிலம் ஆகியவை புழக்கத்தில் உள்ளன. இதில் நீதிமன்ற தீர்ப்புகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் கூறப்படுகின்றன. இதனை தமிழுக்கு மாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, முதற்கட்டமாக உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக […]

2 Min Read
Tamilnadu CM MK Stalin

ஓணம் பண்டிகை – நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!

நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னையில் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அருணா ஆக.29 ஆம் தேதி அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை  அறிவித்துள்ளார். இதற்கு பதிலாக செப்டம்பர் 2-ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

2 Min Read
june holiday

மதுரை ரயில் தீ விபத்து வழக்கு – கைதான் 5 பேரை சிறையிலடைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

மதுரை  ரயில் தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரை செப்.11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  மதுரையில் நடந்த ரயில் தீவிபத்து தொடர்பாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 5 போரையும் செப்.11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி, உத்தர பிரதேசத்தை சேர்ந்த தீபக், பிரகாஷ் ரஷ்தோகி, சுபம் […]

3 Min Read
Madurai High Court

NLC-யால் மாசடைந்த சுற்றுசூழல்.? ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு.! தமிழ்நாடு பசுமை தீர்ப்பாயம் நடவடிக்கை.! 

நெய்வேலி , பரங்கிமலை என்எல்சி தொழிற்சாலைகளினால் சுற்றுசூழல் மாசுபடுவதாக கூறி, ஓர் தண்ணார்வ அமைப்பு ஒன்று என்எல்சி சுற்றுவட்டார பகுதிகளில் நிலம் , நீர், காற்று ஆகியவற்றை ஆய்வு செய்தது. அதில், என்எல்சி சுற்றுப்புறத்தில் அதிகமான அளவில் இரசாயனங்கள், கன உலோகங்களால் பாதிப்படைந்திருந்து என ஆய்வில் கூறப்பட்டது. இந்த ஆய்வறிக்கையை அடிப்படியாக கொண்டு , தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கு […]

4 Min Read
NLC Neiveli

சமூக ஊடகங்களை எதிர்மறையாக பயன்படுத்தாதீர் – பாமக நிறுவனர்

சமூக ஊடகங்களை கொண்டு சாதிக்க வேண்டுமே தவிர சண்டையிட கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எதையெல்லாம் வரம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோமோ அதுவே சில நேரங்களில் சாபமாகி விடுவது உண்டு. பாமகவினரின் சமூக ஊடக பயன்பாடு அப்படிப்பட்டதாகவே மாறி இருக்கிறது. அண்ணா கூறிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது அனைத்து கட்சியினருக்கும் பொருந்தும். அரசியல் கட்சியில் இருப்பவர்கள், அண்ணாவின் அறிவுரையை பின்பற்றவில்லை என்றால் பின்னடைவுதான் ஏற்படும். அரசியல் […]

3 Min Read
ramadoss

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை உயர்வு – அரசாணை வெளியீடு..!

கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களின் துயரினை களைந்திட 14 கடலோர மாவட்டங்களிலும் உள்ள கடலோர மீனவ குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000/- வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக அரசு வழங்கி வருகிறது. அத்தொகையினை உயர்த்தி வழங்கிடக் கோரி பல்வேறு மீனவர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வந்த நிலையில், மீனவ குடும்பங்களின் கோரிக்கையினை ஏற்று, அவர்களின் துயரினை […]

3 Min Read
tamilnadu government

காவேரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் : காணொளி வாயிலாக கலந்துகொண்ட தமிழக அதிகாரிகள்.!

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய காவேரி நீரை அம்மாநில அரசு தரவில்லை என்பதால், தமிழக அரசு தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. காவேரி மேலாண்மை வாரியம் மூலமாகவும், மத்திய அரசு மூலமாகவும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் பெயரில் அமைக்கப்பட்ட காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவின்படி, காவேரியில் இருந்து கடந்த 4 மாதங்காளாக தமிழகத்திற்கு கர்நாடக அரசு தரவேண்டிய தண்ணீர் அளவானது, ஜூன் மாதம் 9 டிஎம்சி, ஆகஸ்ட் […]

3 Min Read
Cauvery River

மதுரை ரயில் தீ விபத்து தொடர்பாக 20 பேரிடம் விசாரணை – தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர்

மதுரை ரயில் தீ விபத்து தொடர்பாக 20 நபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது என்று தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி தெரிவித்துள்ளார். மதுரை அருகே சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு, 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இன்று ரயில் பேட்டி தீவிபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று இரண்டாவது நாள் விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய […]

3 Min Read
trainfire

ஓணம் திருநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!

ஓணம் திருநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், கேரள மக்கள் அனைவராலும் எழுச்சியோடும் ஒற்றுமையோடும் கொண்டாடப்படும் அறுவடைப் பெருவிழாவாம் ஓணம் திருநாளை முன்னிட்டு மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் எனது ஓணம் வாழ்த்துகள்! ஓணத்திருநாள் அன்று, தமிழ்நாட்டில் மலையாள மொழி பேசும் மக்கள் நிறைந்து வாழும் மாவட்டங்களான கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களுக்கு 2006-ஆம் ஆண்டும், தலைநகர் சென்னைக்கு 2007-ஆம் ஆண்டும் கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் விடுமுறை […]

5 Min Read
Tamilnadu CM MK Stalin

#BREAKING : அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு செப்.15-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு…!

செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரிகள், 5 நாட்கள் காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்தது. அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை புழல் சிறையில் இருந்து அமலாக்கத்துறை 5 நாள் காவலில் […]

5 Min Read
Senthil balaji july 12