அதிமுக 2,3 தரப்பு என சொல்ல முடியாது..! அதிமுக என்பது இனிமேல் ஒன்றுதான்..! – எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்று சாதனை படைத்துள்ளோம். பிரச்சனை இன்றி மாநாட்டை நடத்தி அதிமுக கட்டுக்கோப்பானது என்பது நிரூபித்துள்ளோம்.
அதிமுக என்பது இனிமேல் ஒன்றுதான், எங்கள் தரப்பு தான் உண்மையான அதிமுக. அதிமுக மாநாட்டை பார்த்து பொறாமை அடைந்து சேலத்தில் திமுக மாநாட்டை நடத்துகிறது. 15 லட்சம் பேர் வந்த அதிமுக மாநாட்டிற்கு போதிய பாதுகாப்பை காவல்துறை தரவில்லை, ஆனால் அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெறும் திமுக மாநாட்டிற்கு பாதுகாப்பு எப்படி என்பதை பார்க்க உள்ளோம்.
பல இடங்களில் குடிநீருக்காக போராட்டம் நடைபெறுகிறது. காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தீர்வு காண முடியவில்லை; மேட்டூர் அணை நீர் குறைந்து வருவது குறித்து முதலமைச்சர் கவலைப்படவில்லை; தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஊழல் அல்ல. மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025