மதுரை ரயில் தீ விபத்து வழக்கு – கைதான் 5 பேரை சிறையிலடைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

மதுரை ரயில் தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரை செப்.11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் நடந்த ரயில் தீவிபத்து தொடர்பாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 5 போரையும் செப்.11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி, உத்தர பிரதேசத்தை சேர்ந்த தீபக், பிரகாஷ் ரஷ்தோகி, சுபம் காஷ்யப், நரேந்திரகுமார் மற்றும் ஹர்திக் சஹானே ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரையில் ஆக.26ம் சுற்றுலா வந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதுவரை 20 பேரிடம் விசாரணை நடைபெற்று உள்ளது எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025