மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது.பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனோ தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவித்த அவர் தன்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக […]
தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவோடு நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு மாலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இச்சந்திப்பு குறித்து முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை இன்று நேரில் சந்தித்து, தமிழகத்திற்கான நெடுஞ்சாலைகள் திட்டங்கள் […]
சி.பி.ஐ. எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாடு 3 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி நேற்று முந்தினம் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பரம்பரை பரம்பரையாக நிகழ்ந்து வரும் ஊழல் நாட்டுக்கு ஒரு பெரிய சவாலாக இருப்பதாக கூறினார். இதுகுறித்து அவர், உங்களுக்கு முன்னால் இருக்கும் மற்றுமொரு சவால் குறித்து இன்று நான் குறிப்பிடுகிறேன். இந்த சவால் […]
நீங்கள் வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு என்று மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவை நடிகை கங்கனா ரனவத் தாக்கி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை காவல்துறையையும், மராட்டிய மாநில அரசையும் நடிகை கங்கனா ரனவத் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் நடந்த சிவசேனா கட்சியின் தசரா பொதுக்கூட்டத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே கங்கனா ரணாவத்தை மறைமுகமாக தாக்கி பேசினார். அவர் பேசும்போது, […]
இளம் வழக்கறிஞர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிடும் நோக்கில், 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், சட்டப்படிப்பினை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழும தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னர், இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் […]
ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் சிலர் தங்களது சேமிப்பு பணத்தை எல்லாம் ஆன்லைன் விளையாட்டுகளில் பந்தயமாக கட்டி விளையாடுகின்றனர். ஆனால் விளையாடும் அனைவருக்கும் அவர்களது பணம் திரும்ப கிடைத்துவிடுவதில்லை. இது போன்ற ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து சிலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் நடிக்கக் கூடாது என்றும் தற்போது கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர […]
சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டிருந்த இருப்பிட அமைப்பில், இந்தியாவின் லடாக்கை, சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும் அந்த சமுக வலைதள நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தியது. இந்த நிலையில் தகவல் பாதுகாப்பு மசோதா-2019 தொடர்பாக டுவிட்டர் பிரதிநிதிகள் குழு ஒன்று நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராகியது. அப்போது லடாக் சர்ச்சை குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இந்த விவகாரத்தில் […]
கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது. அதன் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக புறக்கணித்தது. அதன்படி இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதிய அணு உலையை ஈரான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டத் தொடங்கியது. […]
ஐக்கிய அமெரிக்கா குடியரசில் வரும் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களமிறக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் அதிபர் வேட்பாளர் இருவரும் ஒவ்வொரு மாகாணமாக சென்று தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல டிரம்பின் பிராசார குழு தனி இணையதளம் வாயிலாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு […]
தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரி அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிகரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான பல இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதே போல கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள திமுக மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் வீடு மற்றும் அவர்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் பேச்சுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா ,இந்தியா இடையே பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையிலான 2+2 பேச்சுவார்த்தையானது நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க அமெரிகாவில் இருந்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2+2 பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பேசுகையில் இந்திய இறையாண்மையை காப்பதற்காக இந்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா துணைநிற்கும் என்றும் அதிரடியாக […]
கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிப்பதாக முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி கானொலி வாயிலாக ஆலோசனை நடத்தியனார் அப்போது முதல்வர் கூறியதாவது;- கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றது.எதிர்க்கட்சிகள் ஒப்பிட்ட பிற மாநிலங்களில் எல்லாம் கொரோனா பரவல் தற்போது அதிகரித்துள்ளது. பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பண்டிகை காலங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஜம்மு காஷ்மீர் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.பிரிக்கப்பட்ட ஜம்முகாஷ்மீர்,லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு ஆளுநர்களை அதிரடியாக மத்திய அரசு நியமித்து ஆளுநரின் கட்டுப்பட்டில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் காஷ்மீரில் அனைவரும் நிலம் வாங்குவதற்கான சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இந்த அனுமதியால் இந்தியாவின் எந்த மூளையிலிருந்தும் ஒருவர் காஷ்மீரில் சொத்து வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்சேதுபதிக்கு எதிராக ட்வீட் செய்ததாக தொடர்ந்து மிரட்டல் மற்றும் அச்சிலேற்ற முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளால் ட்வீட் செய்வதாக திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி பரபரப்பு தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்சேதுபதி இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக இருந்த 800 படத்தில் நடப்பதற்கு தமிழகத்தில் கடும் எதிப்பு கிளம்பியது. மேலும் இதற்கு சினிதுறை மட்டுமின்றி அரசியல் வட்டத்திலும் எதிர்ப்புகள் அதிகரித்தது.எதிர்ப்பு வலுக்கவே முத்தையா முரளிதரன் இப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய்சேதுபதிக்கு கோரிக்கை […]
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வடக்கு மண்டல நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை ஈடுபட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது. இதன் முன்னோட்டமாக மண்டல வாரியாக திமுக நிர்வாகிகளை அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று காலை கிழக்கு மண்டலங்களான புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய […]
இந்தியாவிலேயே முதல்முறையாக காய்கறிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்யும் திட்டத்தை கேரல அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக காய்கறிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்யும் திட்டத்தை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி இனி கேரள விவசாயிகள் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விலையில் இருந்து 20% அதிகமான விலையை கணக்கிட்டு அந்த காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் நவ.,1ந்தேதி இத்திட்டம் கேரத்தில் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக இணையதளம் […]
உத்திர பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் கிராமத்தில் 17வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் அம்மாநில அரசே எரித்தது. இவ்விவகாரம் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்டும் உ.பி அரசுக்கு எதிராகவும் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றன் தாமே முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்தது. இந்நிலையில் அலகபாத் உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் தான் சிபிஐ விசாரணையானது நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் […]
முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் ஊரடங்கு அக்.,31ந்தேதியுடன் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர் குழுவினருடனும், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் மதியம் 2.30 மணிக்கு முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். […]
இன்று பீகார் முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் வாக்குபதிவு தொடங்கிய நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னெச்சரிக்கைகளை கடைபிடித்து வாக்களிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாப் பரவலுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இச்சூழலில் பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது.இன்று 71 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகார் தேர்தலில் மொத்தவேட்பாளர் 114 பெண்கள் உள்பட 1,066 […]
இன்று பீகார் முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் வாக்குபதிவு தொடங்கியது. பாதுக்காப்பு பணியில் 30,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.பிரதமர் மக்கள் ஜனநாயக கடமை ஆற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாப் பரவலுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இச்சூழலில் பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது.இன்று 71 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகார் தேர்தலில் மொத்தவேட்பாளர் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் […]