இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் அடுத்த வாரம் 11-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என நேற்று பிசிசிஐ அறிவித்து இருந்தது. இந்த நிலையில், ரோஹித் ஷர்மா கண்டிப்பாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என்றும் கடந்த ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்ததை இந்த முறை டி-20 போட்டிகளில் விளையாடி கோப்பையை வென்று […]
நமது அண்டை நாடான வங்காளதேசத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதனால் ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பிரதமராகிறார். இதற்கிடையில், பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் வங்காளதேச கிரிக்கெட் வீரரும் கேப்டனுமான ஷாகிப் அல் ஹசன் வெற்றி பெற்றார். வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டார். ஷகிப் அல் ஹசன் தேர்தல் பிரச்சாரத்திற்காக கிரிக்கெட்டில் […]
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அடுத்த வாரம் 11ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்று மீண்டும் டி20 தொடருக்கு திரும்பியுள்ளனர். 14 மாதங்களுக்கு பிறகு: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி நீண்ட நாள்களாக இந்தியாவுக்காக […]
இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதற்க்கான அறுவைச் சிகிச்சையை 22 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற ரஃபேல் நடால் செய்து கொண்டார். இதனால் கடந்த ஆண்டு ஜனவரிக்குப் பிறகு அவர் விளையாடவில்லை. இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய ஓபனில் தனது முதல் போட்டியில் 2020 யு.எஸ். ஓபன் சாம்பியனும் முன்னாள் நம்பர். 3-வது இடமான டொமினிக் தீமை தோற்கடித்தார். பின்னர், கடந்த வியாழன் அன்று ஆஸ்திரேலியா வீரர் ஜேசன் குப்லரை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரஃபேல் […]
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் தயாராகி வருகிறது. இதற்கிடையில்,இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான 19 பேர் கொண்ட அணியை (ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ) ஏசிபி அறிவித்துள்ளது. அணிக்கு முஜீப் உர் ரஹ்மான் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதே சமயம் ஆப்கானிஸ்தானின் வழக்கமான டி20 போட்டிகளின் கேப்டனான ரஷித் கான், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், ஆனால் அவர் சமீபத்தில் மேற்கொண்ட முதுகு அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருவதால் எந்த ஆட்டத்திலும் இடம்பெறமாட்டார். […]
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. போட்டிக்கான அட்டவணையும் ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில், இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் அவர்களுடைய அனுபவம் இந்தியாவுக்கு தேவை என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய இர்பான் பதான் ” விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இந்த மாதிரியான […]
கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. அந்த போட்டிக்கு பிறகு கேப்டன் ரோஹித் சர்மா எந்த ஒரு டி20 போட்டிகளிலும் விளையாடாமல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அவர் டி-20 போட்டிகளில் விளையாடாத காரணத்தால் அவருக்கு பதிலாக இந்தியா விளையாடிய டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா டி20 […]
இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) நேற்று ரகுராம் ஐயரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒரு வருடமாக தலைமை நிர்வாக அதிகாரி( CEO) பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமனக் குழுவால் நடத்தப்பட்ட தேர்வு செயல்முறைக்குப் பிறகு ரகுராம் ஐயர் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐஓஏ தெரிவித்துள்ளது. கவனமாக பரிசீலித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுடன் நேர்காணலுக்குப் பிறகு, நியமனக் குழு ஒருமனதாக ரகுராம் ஐயரை […]
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, கடந்த டிசம்பர் 28ம் தேதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், ஒரே வாரத்தில் அக்கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான அம்பத்தி ராயுடு, கடந்த 2023 ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணியில் விளையாட சரிவர வாய்ப்பு கிடைக்காததால், ஐபிஎஸ்லில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அதிலுந்தும் […]
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சிட்னியில் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, டேவிட் வார்னர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நடு மைதானத்தில் அழுது விட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், டேவிட் வார்னரின் பிரியாவிடை டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சிட்னியில் விளையாடிய […]
2024ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் உலககோப்பையின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. அதில் ஜூன் 1ல் தொடங்கி ஜூன் 29 வரை நடைபெறவுள்ள இந்த தொடரை அமெரிக்காவும் , மேற்கு இந்திய நாடுகளும் இணைந்து நடத்துகிறது. இந்தியா ,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா,நடப்பு சாம்பியன் இங்கிலாந்து போன்ற 20 அணிகள் கலந்து கொள்கின்றது .குழு ஆட்டம் ( Group stage ), சூப்பர் 8 சுற்று, நாக் அவுட் சுற்று என மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெறும். சென்ற 2010 […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து, 2 பேர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளார். 2017ம் ஆண்டு கிரிக்கெட் அகாடமி அமைப்பது குறித்து தோனியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறியதற்காக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மேனேஜ்மெண்ட் லிமிட்டெடை சேர்ந்த திவாஹர் மற்றும் விஷ்வாஷ் இருவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆர்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட்டை சேர்ந்த மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஷ்வாஷ் என்ற அதிகாரிகள் […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தனர். இந்த இரண்டாவது போட்டி மிகவும் குறைவான நேரத்திலே நடந்து முடிந்தது. குறிப்பாக சொல்ல போனால் குறைந்த ஓவர்கள் வீசப்பட்டு முடிந்த டெஸ்ட் போட்டி என்றால் அது இதுவாக தான் இருக்கும் என்று […]
38 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் தொடரான 2023-24 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் ‘எலைட்’, ‘பிளேட்’ என்று இரு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எலைட் பிரிவில் உள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 2023-24 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் அங்கம் வகிக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை […]
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு இன்று கூடுகிறது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. டி20 போட்டிகளில் விளையாட தாங்கள் தயாராக இருப்பதாக பிசிசிஐயிடம் ரோஹித் மற்றும் கோலி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட […]
இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இருப்பினும், தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்திய அணி 153 ரன்களுக்கு […]
தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று முதல் (ஜனவரி 3) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 23.2 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34.5 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் முதல் […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), முடிவு மறுஆய்வு செய்யும் டிஆர்எஸ் விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்து அதிரடி முடிவு எடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை ஐசிசி கொண்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தேவைப்படும் புதிய விதிமுறைகள் அல்லது ஏற்கனவே உள்ள விதிகளில் சில மாற்றங்களை ஐசிசி செய்வது வழக்கமான ஒன்று. இதில், குறிப்பாக கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது முடிவு மறுஆய்வு (டி.ஆர்.எஸ்) முறை என்ற புதிய விதிகள் கொண்டு […]
2023-ம் ஆண்டு ஐசிசி விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்தது வருகிறது. அதன்படி, ஒருநாள் , டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 2023-ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் பெயரை ஐசிசி அறிவித்தது வருகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட 4 பேர் கொண்ட வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் இந்திய அணி சேர்ந்த மூன்று பேரும், நியூசிலாந்தை சேர்ந்த ஒருவரும் இடம் பெற்றுள்ளனர். அதன்படி இந்திய அணியில் இந்திய […]
தென்னாப்பிரிக்கா இந்தியா அணிகளுக்கு இடையே நேற்று முதல் 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 23.2 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் முகமது சிராஜ் 6 விக்கெட்களையும், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்களையும் பறித்தனர். அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் […]