ரோஹித், கோலி அனுபவம் அணிக்கு தேவை! T20 உலகக்கோப்பை குறித்து இர்பான் பதான்!

irfan pathan about virat and rohit

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. போட்டிக்கான அட்டவணையும் ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில், இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் அவர்களுடைய அனுபவம் இந்தியாவுக்கு தேவை என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய இர்பான் பதான் ” விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இந்த மாதிரியான முக்கிய போட்டிகளில் அணிக்கு தேவைப்படுவார்கள். மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. எனவே, இதற்கு முன்பு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் அங்கு பல போட்டிகளில் விளையாடி இருப்பார்கள்.

உலகக்கோப்பை டி20 அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனா? குழப்பத்தில் ரசிகர்கள்!

எனவே, அவர்களை போல அனுபவம் வாய்ந்த வீரர்களை வைத்து விளையாடும் போது நம்மளுடைய அணிக்கு பக்கபலமாக இருக்கும். இரு வீரர்களை தேர்வு செய்வது அணி நிர்வாகம் உரிமை. என்னை பொறுத்தவரை இந்த இரண்டு வீரர்களும் தேர்வு செய்யவேண்டும் என்பது தான் கருத்து.

தனிப்பட்ட முறையில், நான் விராட்டை டி20 கிரிக்கெட்டில் பார்க்க விரும்புகிறேன், ஏனென்றால் கடைசியாக அவர் விளையாடிய ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகள் அவருக்கு மிகவும் அற்புதமான போட்டிகளில் ஒன்றாகும். அதைப்போல, ரோஹித் சர்மா தனது டி20 பார்முக்கு திரும்பவேண்டும். இரண்டு வீரர்களும் ஒரே களத்தில் பார்க்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்” எனவும் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்