சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (17-10-2024) அதிகாலை 4.30 மணி அளவில் வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் – நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது. இந்த நிலையில், அந்தமான் கடல் பகுதியில் வரும் 20ம் தேதி வளிமண்டல சுழற்சி ஒன்று உருவாக உள்ளது. இது வலுப்பெற்று 22ம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் […]
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே இன்று அதிகாலை 4.30 மணியளவில் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) மழை பெய்யவிருக்கும் 3 மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி […]
சென்னை: தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து நிறைவு பெற்று, வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடங்கியுள்ளது எனவும், இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது என முன்னதாகவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில், அதனைத்தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ள வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் “வடகிழக்கு பருவ மழை தீவிரமாக உள்ளது. இதுவரை இயல்பை விட 94% அதிக […]
சென்னை : கடந்த சில நாட்களாகவே பெய்த கனமழை சென்னையை புரட்டி போட்டது. இதனால் நகரின் சில இடங்களில் நீர் தேங்கி மக்கள் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பிறகு, மெல்ல மெல்ல மழை குறைந்துள்ளது. முன்னதாக, காணாமலைக்கான ரெட் அலர்ட் சென்னைக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு கணிப்பின்படி, கனமழை ஏதும் பெரிதும் இல்லாமல், மிக கனமழைக்கான வாய்ப்பு சென்னைக்கு குறைந்துள்ளதாக தனியார் வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். “இன்றிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் […]
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நேற்று (15-10-2024) காலை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை 5.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுது. இன்று (16-10-2024) காலை 8.30 மணி அளவில், அதே பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 400 கிலோமீட்டர் […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மேலும், இது தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை அதிகாலை இது நெல்லூர் அருகே கரையைக் கடக்கும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் இன்று […]
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (14-10-2024) காலை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (15-10-2024) காலை 5.30 மணி அளவில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுது. இது, நாளை காலை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிடும் என கூறுகின்றனர் வானிலை ஆய்வாளர்கள். பின்னர், அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே […]
சென்னை : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாளை அக் 16 தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை, அதித கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,… ரெட் அலர்ட் […]
சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியது குறித்தும், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை குறித்தும் வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தற்போது குறிப்பிட்டுளளார். அவர் கூறுகையில், ” கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலைப்பகுதியில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இன்றுடன் தென்மேற்கு பருவமழை நிறைவு பெற்று, வடகிழக்கு […]
சென்னை : வடகிழக்கு பருவமழை இன்று (அக்டோபர் 15) தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே, வடகிழக்கு பருவமழை இன்றோ நாளையோ தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தென்மேற்கு பருவமழை முழுவதும் நிறைவுபெற்று, தமிழகம், புதுவை, கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே, மழை வெளுத்து […]
சென்னை : தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நிறைவு பெற்று, வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடங்கியுள்ளது எனவும், இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்நிலையில், வானிலை தொடர்பான தகவல் குறித்த அறிவிப்பை பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக, மீனவர்களுக்கான எச்சரிக்கை குறித்த தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,… தமிழக […]
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இன்று தீவிரமடைந்து தமிழகம் நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை நிலவரப்படி சென்னையில் இருந்து சுமார் 520கிமீ தூரத்தில் இருக்கிறது என கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நெருங்கி வருவதால் வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதி என பல்வேறு இடங்களில் கனமழை கொட்டிதீர்க்கும் என […]
சென்னை : தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று காலை 5.30 மணி வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த 2 நாட்களில் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை […]
சென்னை : தமிழநாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது வங்கக்கடலில் உருவானது என்றும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்றும் அதனால் சென்னை முதல் புதுச்சேரி வரையிலான கடற்கரை பகுதியில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து […]
சென்னை : தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று முதல் படிப்படியாக மழையின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. […]
சென்னை : தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தமிழக உள் பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடலிலும் தலா 1 வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இன்று உருவான அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி 48 மணி நேரத்தில் நகரும் என்றும் கூறியுள்ளது. […]
சென்னை : லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (10-10-2024) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு அரேபிக் கடல், கர்நாடகா – கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய […]
சென்னை : லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே, வரும் 7 நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது பற்றிய விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று ( 09.10.2024) : தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது […]
சென்னை : லட்சத்தீவு, கேரளா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, […]
சென்னை : லட்சத்தீவு, கேரளா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும், சில மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, (இன்று) 08.10.2024, மற்றும் நாளை (09.10.2024:) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி […]