Categories: சினிமா

LEO FDFS: சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து…1000 பேருக்கு விலையில்லா பிரியாணி.!

Published by
கெளதம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் லியோ படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு விஜய் ரசிகர்களின் ‘விலையில்லா விருந்தகம்’ சார்பில் பிரியாணி தயார் செய்து அசத்தியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் காட்சி  கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அதிகாலை 4 மணிக்கும் 5 மணிக்கும் திரையிடப்பட்டது. ஆனால், தமிழகத்தில் பல கட்டுப்பாடுகளுடன் 9 மணியளவில் லியோ திரைப்படம் வெளியானது.

லியோ திரைப்படம் வெளியாவதை ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கடந்த ஒருவாரமாகவே கொண்டாடி வருகின்றனர். பெரிய எதிர்பார்ப்புக்கு வெளியாகியுள்ள இப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வெற்றிபெற நடிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், முதல் காட்சியை காண முக்கிய திரை பிரபலங்கள் பலரும் தியேட்டருக்கு வந்த வண்ணம் உள்ளார்கள்.

அந்த வகையில், இன்று காலை திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வெளியே மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 9 மணியளவில் லியோ திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

LEO Review : பரபர ஆக்சன்… பக்கா மாஸ்.! தளபதி விஜயின் லியோ எப்படி இருக்கு.?

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாபு திரையரங்கில் நடிகர் விஜய் ரசிகர்களின் ‘விலையில்லா விருந்தகம்’ சார்பில் 1000 பேருக்கு வழங்க தடபுடலாக தயாரானது பிரியாணி.  9 மணிக்கு தொடங்கிய முதல் காட்சி தற்போது முடிந்த நிலையில், விஜய் ரசிகர்கள் பிரியாணி சாப்பிட ஏற்பாடுகள் செயப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, அடுத்த காட்சிக்கு காத்திருந்த ரசிகர்கள் தயார் செய்யப்பட்டு வைத்திருந்த பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

Leo FDFS: லியோவில் காதலுக்கு மரியாதை!! திரைக்கு முன்பு நடைபெற்ற திருமணம் நிச்சயம்!

லியோ

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். பெரிய எதிர்பார்ப்புக்கு வெளியாகியுள்ள இப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

5 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

6 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

6 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

7 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

7 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

8 hours ago