69 national film award [file image]
சினிமா துறையினை இந்திய அரசினால் கௌரவவிக்கப்படும் உயர்ந்த விருதான தேசிய விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டுகாண 69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. மாலை 5 மணிக்கு டெல்லியில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த விருதை அறிவிக்கிறார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு தேசிய விருதுகளுக்கான போட்டியில் பல மொழிப் படங்கள் போட்டியிடுகிறது. தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த கர்ணன், சூர்யா, மணிகண்டன், உள்ளிட்டோர் நடித்த ஜெய் பீம், ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு ஆகிய படங்கள் இடம்பெறும் எனவும், இந்த படங்களில் பணியாற்றிய பிரபலங்களுக்கும் விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
தமிழ் நடிகர்கள்
சூர்யா, தனுஷ், ஆர்யா, மணிகண்டன், சிம்பு,
நடிகை
லிஜோமோல் ஜோஸ்
இயக்குனர்கள்
டி.ஞானவேல், மாரி செல்வராஜ் ,வெங்கட் பிரபு, பா.ரஞ்சித்
தெலுங்கு & ஹிந்தி
தெலுங்குத் சினிமாவில் பொறுத்தவரை அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படம் இடம்பெறலாம், புஷ்பா படம் எல்லா மொழிகளிலும் ஹிட் ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அதைப்போல , தெலுங்கில் சூர்யவன்ஷி, 83, ஆகிய படங்கள் போட்டியில் இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது நடிகர் சூர்யா சூரரைப்போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கினார். அதைபோல், இன்று ஜெய்பீம் படத்தில் நடித்ததற்காக வாங்குவார் இன்று அறிவிக்கப்படவுள்ள பட்டியலில் அவருடைய பெயரும் இடம்பெறும் எனவும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறார்கள். எந்தெந்த படங்களுக்கு விருது அறிவிக்கப்படும் , எந்தெந்த பிரபலங்களுக்கு விருது அறிவிக்கப்படும் என்பது இன்று மாலை 5 மணிக்கு தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…