சினிமா

பிக் பாஸ் வீட்டில் வெடித்த பல மணி நேர சண்டை! 10 நிமிடத்தில் முடித்த பவா செல்லத்துரை!

Published by
பால முருகன்

பிக் பாஸ் 7-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில், நாள் அதிகரிக்க அதிகரிக்க வீட்டிற்குள் சண்டை வெடிக்க தொடங்கி வருகிறது. குறிப்பாக வீட்டிற்குள் நுழைந்த பிரதீப் முதல் நாளில் இருந்தே வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும் கேப்டனாக இருந்த விஜய்யுடன் வாக்கு  வாதத்தில் ஈடுபட்டார்.

அடுத்ததாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த விஷ்ணு மற்றும் மாயா இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது அதில் நடிகை மாயா கிருஷ்ணன் பிரதிப்பையும் உள்ளே இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அதனை தொடர்ந்து நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேப்டன் பதவிக்கு சண்டை நடந்தது .

கேப்டனாக வீட்டிற்குள் இருந்த விஜய் அவருடைய வேலையை சரியாக செய்யவில்லை என முதல் இருந்தே விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருந்தது. இதனையடுத்து நேற்று பிரதீப் சண்டை போட்டுகொண்டு இருந்த நிலையில், பலரும் இந்த சண்டையில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதாவது பிக் பாஸ் vs ஸ்மால் பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டை நடைபெற்று கொண்டிருந்தது.

பல மணி நேரங்கள் இந்த சண்டை நடந்து கொண்டிருந்த நிலையில், பவா செல்லத்துரை “இங்கு நாம் வந்தது சண்டை போடுவதற்கு இல்லை. எனவே, இங்கு  சண்டையே வேண்டாம் நீங்க உங்க டீமோட உட்கார்ந்து பேசி முடிவு பண்ணி ஒருமனதா கொண்டு வந்து சொல்லுங்க. ஸ்மால் ஹவுஸ் எல்லாம் சண்டை போடுவதை நிறுத்திட்டு இங்க வாங்க” என பொறுமையாக கூறி 10 நிமிடத்தில் அந்த சண்டையை முடித்தார்.

இவர் சண்டையை முடித்ததை பார்த்த அனைவரும் தலைமை பண்பு என்பது பதவியை பொறுத்து வருவது அல்ல  எனவும் இந்த சண்டையை பிக் பாஸ் கேப்டனாக இருக்கும் விஜய் தான் முடித்து வைத்திருக்கவேண்டும் என கூறி வருகிறார்கள். மேலும். பவா செல்லத்துரை யாரிடமும் சரியாக பேசமாட்டிக்கிறார் இயல்பாக இருக்கமாட்டிக்கிறார் என பலரும் பிக் பாஸ் வீட்டிற்குள் கூறினார்கள்.

குறிப்பாக பிரதீப் கூட நீங்கள் அனைவரிடமும் சகஜமாக பழகுங்கள் என கூறினார். அதற்கு பவா செல்லத்துரை நான் அந்த கடவுளே வந்து சொன்னால் கூட என்னுடைய இயல்பை யாருக்காகவும் மாற்றிக்கொள்ளமாட்டேன்” என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

21 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

24 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago