Veera Dheera Sooran [File Image]
எஸ்.ஜே.சூர்யா : நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா தற்போது விக்ரமுக்கு வில்லனாக வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சித்தா படத்தினை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் எஸ்.யு. அருண் குமார்இயக்கி வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நேற்று மதுரையில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. இதனையடுத்து, படம் வெளியாவதற்கு முன்பே படம் ஹிட் என எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” மதுரையில் எனக்கும் விக்ரம் சாருக்கும், சிராஜுக்கும் இடையே வீர தீர சூரன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்டது. இந்த காட்சியை எடுப்பதற்கு முன்பு இயக்குனர் அருண்குமார் தன்னுடைய குழுவை அழைத்து சென்று கிட்டத்தட்ட 10 நாட்கள் தொடர்ச்சியாக காட்சிக்காக ஒத்திகை பார்த்தார்.
பிறகு இன்று எங்களை மதுரைக்கு அழைத்து சென்று ஷூட் செய்தார். அதிகாலை 5 மணிக்கு அவர் நினைத்ததை கொண்டுவந்துவிட்டார். அவரைப் பற்றி நான் ஒன்று சொல்ல வேண்டுமென்றால் அவர் ‘கலைத்தாயின் இளைய மகன்’ என்று தான் சொல்வேன்” என கூறிஉள்ளர். இதற்கு முன்னதாக எஸ்.ஜே.சூர்யா மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்போது ட்வீட் செய்து இருந்தார்.
மார்க் ஆண்டனி படமும் பெரிய அளவில் பேசப்பட்டு விஷால் மற்றும் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் ஆகியோருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்தை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா வீர தீர சூரன் படத்தின் இயக்குனரை பாராட்டியுள்ளதால் இந்த படம் விக்ரமுக்கும் பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…