Chiyaan vikram [File Image]
தங்கலான் திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் நடிகர் விக்ரமிற்கு காயம்.
நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது, தங்கலான் படப்பிடிப்பில் திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கான ஒத்திகையின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விக்ரமுக்கு”விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நடிகர் விக்ரம். இதனால், சிறிது நாட்கள் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என நடிகர் விக்ரமின் மேலாளர் சூரியநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.
படத்திற்காக எந்த அளவிற்கு படக்குழு கடினமாக உழைத்துள்ளார்கள் என்பது இந்த மேக்கிங் வீடியோவில் தெரிகிறது. இதற்கிடையில், விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 கடந்த மாதம் 28-ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சைக்கை போடு போட்டு வருகிறது.
விபத்தை அறிவித்த விக்ரமின் மேலாளர், பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலன் பெற்ற அன்பு மற்றும் பாராட்டுக்களுக்கும், உலகம் முழுவதிலுமிருந்து PS2-வுக்கு கிடைக்கும் வியக்க வைக்கும் வரவேற்புக்கும் விக்ரம் தனது நன்றிகளை பகிர்ந்துள்ளார் எனவும் பகிர்ந்து கொண்டார்.
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…