விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் விவேக் பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகராவார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும், இயற்கை வளத்தின் மீது அக்கறை கொண்டவராக வளம் வருகிறார்.
இவர் மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு போன்ற செயல்களில் மக்கள் ஈடுபடும்படி வலியுறுத்தி வருகிறார். மேலும், இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நடிகர் விவேக் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், பிள்ளையார் சதுர்த்தி வருகிறது. வர்ணம்( ரசாயனம்) பூசாத சிலைகள் வாங்கி வழிபடுவோம். பின்னர் நீர்நிலைகளில் கரைக்கும் போது மண், மண்ணுடன் சேர்ந்து, இயற்கையின் இயல்பு பாதுகாக்கப்படும். கணேசர் அறிவார் நம் மனத்தை, காப்போம் கடல் வாழ் உயிரினத்தை என்று பதிவிட்டுள்ளார்.
பிள்ளையார் சதுர்த்தி வருகிறது. வர்ணம்( ரசாயனம்) பூசாத சிலைகள் வாங்கி வழிபடுவோம். பின்னர் நீர்நிலைகளில் கரைக்கும் போது மண், மண்னுடன் சேர்ந்து, இயற்கையின் இயல்பு பாதுகாக்கப்படும். கணேசர் அறிவார் நம் மனத்தை; காப்போம் கடல் வாழ் உயிரினத்தை!????????
— Vivekh actor (@Actor_Vivek) August 31, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025