சினிமா

குழந்தைகள், பெண்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ என பல ஆண்டுகளாக நம்பவைத்த நடிகர்கள்? லிஸ்ட் போட்ட ப்ளூ சட்டை!

Published by
பால முருகன்

ப்ளூ சட்டை மாறன் படங்களை பற்றி விமர்சனங்கள் செய்வதும் ஒரு நடிகர் மற்றும் படங்களின் வசூலை விமர்சனங்களை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், தொடர்ச்சியாக படங்களை விமர்சனம் செய்யும்போது அப்படியே அந்த நடிகர்களை பற்றி யூடியூபில் விமர்சனம் செய்து வந்த நிலையில், சமீப நாட்களாக தனது சமூக வலைதள பக்கங்களில் விமர்சித்து வருகிறார்.

அந்த வகையில், சிறிய வயதில் இருந்து பல நடிகர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த படங்களில் தொடர்ச்சியாக நடித்து தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களை விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார். அதனை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ என பல ஆண்டுகளாக நம்பவைத்த நடிகர்கள் என்பது போல வேறு விதமாக பதிவிட்டு இருக்கிறார்.

முதலில் விஜய் பற்றி பதிவிட்டு இருக்கும் அவர் ” விஜய் ஒரு காலத்தில் திருப்பாச்சி, கில்லி,மற்றும் சிறந்த காதல் படங்களால் பெண்கள் மனதில் இடம் பிடித்தவர். ஆனால் சமீபகாலமாக பீஸ்ட், வாரிசு, லியோ என எதுவும் குடும்பங்களை கவரவில்லை‌‌. எனவும் இந்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்தது போல சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

லியோ சிறப்புக்காட்சிக்கு அனுமதி தரக்கூடாது! ப்ளூ சட்டை மாறன் பதிவு!

அடுத்ததாக,  லாரன்ஸ் பற்றி பதிவிட்டிருக்கும் அவர் ” பேய்காமடி படங்களை தவிர எந்த கதையில் இவர் நடித்தும் தேறவில்லை. லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2 வும் ஊத்திக்கொண்டது. இனி இதே மாதிரி பேய்காமடியில் நடித்து வண்டி ஓட்ட முடியாது. என கூறியுள்ளார். அதாவது காஞ்சனா திரைப்படத்தை தவிர லாரன்ஸிற்கு வேறு எந்த படங்களும் சரியாக ஓடவில்லை என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

அடுத்ததாக சிவகார்த்திகேயன் பற்றி கூறியிருக்கும் அவர் ” சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக உப்மா  பட்ஜெட்டில் எடுத்த ப்ரின்ஸ் படம் மக்களிடம் எடுபடவில்லை. மாவீரன் ஓரளவு தப்பினாலும்.. இசைமான் (இமான்)  சர்ச்சையால்.. பெண்களிடம் இவரது இமேஜ் கடும் டேமேஜ் ஆகியுள்ளதாம்‌. இமான் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறியதை வைத்து ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு இருக்கிறார்.

அது மட்டுமன்றி இப்போதைக்கு தமிழில் ‘குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோ’ இடத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை மறுக்க இயலாது. அடுத்து பெண்கள், குழந்தைகளை ஏமாற்ற வரப்போகும் உங்க வீட்டுப்பிள்ளை யாரோ? எனவும் பதிவிட்டு இருக்கிறார். இவர் இப்படி பதிவிட்டுள்ளது விஜய், சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு கடுப்பேற்றி உள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…

45 minutes ago

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…

1 hour ago

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

2 hours ago

மாணவர்களே ஜூன் 2 பள்ளிகள் திறப்பு! முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!

சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…

2 hours ago

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…

3 hours ago

கட்டுப்பாட்டை இழந்த கார்…விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி!

கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…

3 hours ago