சினிமா

மூச்சு முட்ட முட்ட…நடுக்கடலுக்குள் நடிகை ராஷ்மிகா மந்தனா..வைரலாகும் வீடியோ!

Published by
பால முருகன்

வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பல படங்களில் நடிக்க கமிட் ஆகி நடித்து வருகிறார். குறிப்பாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 மற்றும் ரன்பீர்கபூருக்கு ஜோடியாக அனிமல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் அவர் நடித்து வரும் அனிமல் படத்தின் நீ வாடி என்ற பாடல் கூட வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

அந்த பாடலில் நடிகை ராஷ்மிகா மந்தனா பல முறை லிப் லாக்காட்சியில் நடித்து வந்தது தெரிய வந்தது. இதனை பார்த்த பலரும் பாடலிலே இவ்வளவு முத்தக்காட்சியா? எனவும் கேள்வி எழுப்பி வந்தார்கள். இந்த அனிமல் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பாட்டுலே இத்தனை முத்த காட்சிகளா? அந்த மாதிரி சீனில் அசால்ட்டாக நடித்த ராஷ்மிகா!

அதன்படி, ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக “யார் லா சொவ்”  படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘The Girlfriend’ என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் போய்க்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை வித்யா கோப்பினிடி மற்றும் தீரஜ் மொகிலினேனி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இந்த ‘The Girlfriend’ படத்திற்கான ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது. ப்ரோமவில் சிரித்துக்கொண்டே நடிகை ராஷ்மிகா மந்தனா நடுக்கடலில் தன்னுடைய மூச்சை அடைத்துக்கொண்டு இருக்கிறார். அத்துடன் ஒரு குரலும் வருகிறது. அதில் ” நான் அவளை மிகவும் நேசிக்கிறேன், அவளுக்கு நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது வேறு யாரும் தேவையில்லை. அவளுக்குத் தேவையானது நான்தான்.

அவள் 24 மணி நேரமும் என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என வருகிறது. பிறகு மூச்சு விடமுடியாமல் ராஷ்மிகா மந்தனா மயங்குகிறார் அத்துடன் ப்ரோமோவும் முடிவடைகிறது. இதனை பார்த்தவுடனே படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. மேலும், ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் மாற்றம்.! ஃபைனல் எங்கு தெரியுமா.?

டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த…

8 minutes ago

தேர்தலில் கூட்டணியா? தனித்து போட்டியா? – ஆதவ் அர்ஜுனா கொடுத்த விளக்கம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (மே 20,…

29 minutes ago

‘வக்பு சட்டத்தால் இஸ்லாமிய மக்கள் பெரும் பாதிப்பு’… ஆதவ் அர்ஜுனா காட்டம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகதின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் இன்று மதியம்…

49 minutes ago

நீலகிரியில் வெளுத்து வாங்க போகும் மழை.! ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு…

2 hours ago

‘கணவரை பிரிய 3-வது நபரே காரணம்’ – ஆர்த்தி பளிச்.! அப்படி என்ன சொன்னார்.?

சென்னை : ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து விவகாரம் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும்…

2 hours ago

‘வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை’ – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு .!

சென்னை : மின் கட்டணத்தை 3% உயர்த்த மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என தகவல்…

3 hours ago