Adipurush screening [Image- insta/ actorprabhas & ANi]
ஆதிபுருஷ் படத்தை திரையிடுவதை தடை செய்யக்கோரி பிரதமருக்கு சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான ஆதிபுருஷ், ராமாயண இதிகாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்தை திரையிடுவதற்கு உடனடியாக தடை செய்யவேண்டும் என அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் மற்றும் வசனங்கள் இந்து மத கடவுள்களான ராமர் மற்றும் அனுமனை அவமதிக்கும் விதமாகவும், மத ரீதியாக புண்படுத்தும் விதமாகவும் இருப்பதாகக் கூறி இந்த படத்தை திரையரங்குகளில் திரையிடுவதை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என பிரதமருக்கு அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் மூலமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆதிபுருஷ் படத்தை, ஓடிடி தளங்களிலும் வெளியிட தடை விதிக்குமாறும், திரைப்படத்தின் இயக்குனர் ஓம் ரவுத், வசனம் எழுதிய மனோஜ் மந்தாஷிர் சுக்லா மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யவேண்டும் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…