நடிகை சுஸ்மிதா சென் பிரபலமான இந்திய நடிகையாவார். இந்தியாவில் இருந்து முதன் முதலில் உலக அழகிப்பட்டம் பெற்றவர் இவர் தான். இவர் தமிழ் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் இவர் ஐதராபாத்தில் நடைபெற்ற தத்தெடுப்பு குறித்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஐதராபாத் தான் எனது தாய் வீடு. நான் இங்குதான் பிறந்தேன். எப்போது சந்தர்ப்பம் கிடைத்தாலும், நான் வந்துவிடுவேன். அது எனது வீட்டுக்கு வருவதை போன்றது என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எனது இரண்டாவது மகள் அலிஷாவை தந்தெடுப்பதற்காக 10 வருடம் உச்ச நீதிமன்றத்தில் போராடினேன். ஏன்னென்றால், இந்திய சட்டம் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளை தத்தெடுக்க அனுமதிக்கவில்லை. மிகவும் போராடி தான் எனது இரண்டாவது குழந்தை அலிஷாவை தத்தெடுத்தேன் என்றுகூறியுள்ளார்.
மேலும், தத்தெடுப்பு என்பது வயிற்றில் இருந்து வரும் உறவு அல்ல. அது மனதில் இருந்து வருவது என்றும், எனவே அரசு, இந்தியாவில் தத்தெடுக்கும் முறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு துறைகளிடம் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…