“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா? இல்லையா? என தெரியவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Edappadi Palaniswami - Kovai

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பொதுமக்களிடம் பேசுகையில், ”ஸ்டாலின் ஆட்சியை பற்றி சொல்ல வேண்டும் எனில், Simply Waste. ஸ்டாலின் மாடல் ஆட்சியை ஒழித்து, அம்மாவின் ஆட்சியை 2026ல் அமைப்போம்.

இந்த 50 மாத கால திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. சிறுமி முதல் முதியோர் வரை யாரும் நிம்மதியாக இல்லை. முதியோரை கடுமையாக தாக்கி கொலை செய்யும் காட்சி ஊடகங்களில் வருகின்றன. அதை தடுக்க ஸ்டாலினுக்கு திறனில்லை.

திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெல்லும் என பகல் கனவு காண்கிறார் ஸ்டாலின். எப்படி வெல்வீர்கள்? மக்களுக்கு ஏதாவது செய்திருந்தால் தானே வெல்ல முடியும்? இந்த 50 மாத கால ஆட்சியில் கோவைக்கு எந்த புதிய திட்டத்தையாவது கொண்டு வந்துள்ளீர்களா?

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நான் யாரையும் “கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்துகொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா? இல்லையா? என்று முகவரி இல்லாமல் இருக்கிறது.  ஸ்டாலினுக்கு அடிமையாக இருக்கிறார். ஆனால் CPIM தலைவர் சண்முகமோ “திமுக ஆட்சியில், மக்களோட பிரச்சனை தீர்க்க முடியவில்லை, இப்படியே போனால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்கிறார், வரவேற்கத்தக்கது. கூட்டணி கட்சியினரே இப்போது திமுகவை நம்பத் தயாராக இல்லை.

தங்கள் கூட்டணி வலுவாக உள்ளதாக சொல்கிறார் ஸ்டாலின். நீங்கள் கூட்டணியை நம்புகிறீர்கள், நாங்கள் மக்களை நம்புகிறோம். அதிமுக பலம் பெற்று வருகிறது. திமுக மக்களின் பிரச்சனைகளை சரிசெய்யவில்லை என மார்க்சிஸ்ட் கட்சி சொல்கிறது” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்