Ajith Kumar [FIle Image]
நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பம் எங்கு சுற்றுலா சென்றாலும் அல்லது ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் அவர்களுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவிடும். கடைசியாக நடிகர் அஜித் ஓமன் சென்று சென்னை திரும்பிய வீடியோ ஒன்று நேற்று வைரலானது.
நடிகர் அஜித் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ள திரைப்படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்திற்கான அறிவிப்பு மட்டுமே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
அதன்பிறகு அஜித் தன்னுடைய பைக் சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டு வந்த காரணத்தால் விடாமுயற்சி படத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வியும் ஒரு வேலை தொடங்காமல் அஜித் பைக்கில் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளாரா? எனவும் கேள்விகள் எழுந்துகொண்டு இருந்தது.
இந்த கேள்விக்கு விடையளிக்கும் வகையில், நேற்று அஜித் சென்னை திரும்பிய நிலையில், படப்பிடிப்பை தொடங்க வந்துவிட்டார் என்று ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். இந்நிலையில், தனது குடும்பத்தின் நெருங்கிய விழா ஒன்றில் அஜித் கலந்து கொண்டுள்ளார். அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அப்படி, ஒரு வீடியோவில் ரசிகர்கருடன் ஜாலியாக உரையாடும் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும், அந்த விழாவிற்கு மாஸ் என்ட்ரி கொடுக்கும் வீடியோவும், ரசிங்கர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தருணத்தையும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…