ammu abhirami [File Image]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை தான் அம்மு அபிராமி. இவர் தனுஷிற்கு ஜோடியாக அசுரன் திரைப்படத்திலும் நடித்து இருந்தார். அதைப்போல, ராட்சசன், யானை உள்ளிட்ட படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்.
முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக படங்களில் ஹீரோயினாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அம்மு அபிராமி தன்னுடைய வாழ்வில் கடந்து வந்தபோது நடந்த சம்பவங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங்க்கு விரைவில் டும்..டும்..டும்?
இது குறித்து பேட்டியில் பேசிய நடிகை அம்மு அபிராமி ” நான் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருவருக்கு என்னை ரொம்ப பிடித்திருந்தது. ஆனால், அவர் மீது எனக்கு பெரிய அளவில் விருப்பம் வரவில்லை. ஒரு முறை அவர் என்னிடம் வந்து காதலை சொன்னார். நான் அதற்கு எனக்கு இதெல்லாம் செட் ஆகாது என்று சொன்னேன்.
அதுவும் நான் கோபமாக கூட சொல்லவில்லை சாதாரணமாக தான் சொன்னேன். நான் அப்படி சொன்ன அடுத்த நாளில் இருந்து என்னை தவறான பெயரை சொல்லிக்கொண்டே அழைத்தார். காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத காரணத்தால் என்னை கண்டபடி கெட்டவார்த்தைகளை போட்டு என்னை தீட்டினார். பெண்களை திட்டி தான் பெரும்பாலான கெட்டவார்த்தைகள் இருக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை.
எனக்கு ஒரு விஷயத்தில் விருப்பம் இல்லை என்று சொல்கிறேன். அப்படி சொன்ன காரணத்தால் என்னை தவறாக நினைத்து கொள்கிறார்கள். நான் அந்த மாதிரி இல்லை என்றாலும் என்னை அந்த வார்த்தையால் என்னை திட்டியது ரொம்பவே ஒரு மாதிரி இருந்தது” எனவும் நடிகை அம்மு அபிராமி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் மாதந்தோறும் சராசரியாக 35,000 முதல் 40,000 பேர் வரை இறப்பதாக உணவு வழங்கல் துறையின் புள்ளிவிவரங்கள்…
காசாவில் உள்ள கான் யூனிஸ் என்ற பகுதியில், ஜூலை 16, 2025 அன்று நிவாரணப் பொருட்கள் (உணவு, மருந்து போன்றவை)…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 17-ஆம் தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து தான் பேசிய…
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…