பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாததால் யூடியூப் சேனலில் திரை விமர்சனங்கள் செய்துவருகிறார்.
திரைசினிமா குறித்த செய்திகள், நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்தும் அதிகம் பேசி வருகிறார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் குறித்தும், நடிகை அபிராபி, சிம்ரன் ஆகியோரையும் தொடர்பு படுத்தி இவர் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த சோனியா என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பயில்வான் ரங்கநாதன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் , பயில்வான் ரங்கநாதன் என்பவர் பெண்கள் குறித்தும், உடல் உறுப்புகள் குறித்தும் ஆபாசமாக பேசி வருகிறார். உடனடியாக அவரை கைது செய்யவேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக இணையத்தில் அவதூறாக பேசியதாக 8 பேர் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்போது பயில்வான் ரங்கநாதன் மீதும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…