திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல்! எப்போது ரிலீஸ் ஆகிறது அசுரன்?!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்துள்ள திரைப்படம் அசுரன். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். மஞ்சுவாரியர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இப்படம் முதலில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தால் இந்த படம் டிசம்பர் மாதம்தான் வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இது பொங்கல் தினத்தன்று வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இது பொங்கல் கொண்டாட்டத்திற்க்கான படம் இல்லை என்பதால், விடுமுறை தினத்தை கணக்கிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025