விளையாட்டு

அயலானுக்கு வந்த புதிய சிக்கல்…இவ்வளவு செலவு செய்தும் பலன் இல்லையா?

Published by
கெளதம்

நடிகர்  சிவகார்த்திகேயன் நடித்து நீண்ட காலமாக வெளியாகாமல் உள்ள படம் ‘அயலான்’. இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டது. படத்தின் சிஜி வேலைகள் முடிவடையாத காரணத்தால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

அப்படி இப்படினு ஒரு வழியாக படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்திற்கான ட்ரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.

ஏலியன் நம்மளுடைய உலகத்திற்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதனை காமெடியாக வைத்து ஆர்.ரவிகுமார் இந்த அயலான் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். ஏற்கனவே, இவர் இயக்கிய இன்று நேற்று நாளை படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த அயலான் படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

தீபாவளி இல்ல…பொங்கலுக்கு தான் ரிலீஸ்! ‘அயலான்’ புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!

இந்த படத்தை வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு நிலையில், பொங்கல் அன்றும் ரிலீஸில் தாமதம் ஏற்படும் என கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது, படத்தின் VFX காட்சிக்கு அதிகப்படியான தொகையை செலவு செய்துவிட்டதால், தற்போது ரிலீஸ்க்கு தேவையான பணம் இல்லை என்று கூறப்படுகிறது.

VFX காட்சிக்கு கோடிக்கணக்கில் செலவு செய்தும், ரிலீஸுக்கு பணம் இல்லை என்ற வருத்தத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உள்ளனர். அயலானை ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்தாலும், படத்துக்கு முன்னதாக படக்குழுவுக்கு பணம் கொடுக்கப்படாது. ரிலீஸுக்கு பின்னரே பங்கீடு தொகையாக கொடுக்கப்படும். இதனால், என்ன செய்வதன்றி தவிக்கிறது அயலான் படக்குழு.

ஆயிரம் கோடி வசூலை தட்டி தூக்க காத்திருக்கும் தமிழ் சினிமா.! டாப் லிஸ்ட் இதோ…!!

அயலான்

இந்த திரைப்படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, ஷரத் கேல்கர், பால சரவணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

3 வருடம் தாமதம்

இயக்குனர் ஆர்.ரவிகுமார் அயலான் படம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ”அயலான் படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த 2018-ஆம் ஆண்டு கிளம்பினோம். அந்த படப்பிடிப்பில் 50% முடிந்துவிட்டது. பிறகு திட்டமிட்ட படி, 2018-ஆம் ஆண்டு படப்பிடிப்பு நடக்கவில்லை. அதன்பிறகு, 2019-ஆம் ஆண்டு திரும்பவும் படப்பிடிப்பை தொடங்கினோம்.

பிறகு 2020-ஆம் ஆண்டு கொரானா வருவதற்கு முன்பு கொஞ்ச நாட்கள் ஷூட்டிங் போனோம். அதன்பிறகு கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பிறகு 2021-ஆம் ஆண்டு தான் படப்பிடிப்பை முடித்தோம். கடைசியாக 50 நாட்கள் படத்தை எடுக்க 3 வருஷம் ஆகிவிட்டது” என ஆர்.ரவிகுமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

16 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

18 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

21 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

22 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago