samantha [File Image]
சிட்டாடல் வெப் தொடர் படப்பிடிப்பில் மயங்கி விழுந்து விட்டதாக சமந்தா தெரிவித்துள்ளார். குஷி திரைப்படத்தை தொடர்ந்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு சிட்டாடல் வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார்.
சமந்தா தனது சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடின் உரையாடலின் போது, படப்பிடிப்பில் அவர் எதிர்கொண்ட கடினமான சவால்கள் குறித்து வெளிப்படுத்தினார். அவரது இணை தொகுப்பாளரும் ஆரோக்கிய பயிற்சியாளருமான அல்கேஷ் ஷரோத்ரியுடன் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தசை அழற்சி காரணமாக படப்பிடிப்பு கடினமானதாக இருந்தது. சண்டை காட்சிகளில் கஷ்டப்பட்டே நடித்தேன். ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்து விட்டேன்” எனக் கூறியுள்ளார்.
இரட்டையர் இயக்குனர்களான ராஜ் மற்றும் டி.கே இயக்கிய இந்தத் தொடர், ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது. கடந்த 2022 -ல் மயோசிடிஸ் நோயிக்கு பிறகு, சமந்தா தனது நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்தார்.
நீண்ட கால ஓய்வுக்கு பின்பு குணமடைந்து வரும் சமந்தா தற்பொழுது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதனை வெளியிட்டு நெட்டிசன்களை திகைக்க செய்துள்ளார். சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…