நினைச்சு கூட பார்க்க முடியல! மார்பிங் வீடியோவால் வருத்தத்தில் நடிகை ராஷ்மிகா!

rashmika SAD

ராஷ்மிகா பற்றிய போலியான வீடியோ ஒன்று வைரலாக பரவி கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு விளக்கம் அளித்து அவரே பதிவு ஒன்றை வெளியீட்டு இருக்கிறார்.

மார்பீங் வீடியோ

நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை மார்பிங் செய்து AI தொழில் நுட்பம் மூலம் பரவி வந்த வீடியோவை பார்த்த பலரும் ஒரு லிப்டில் இப்படியா உடை அணிந்துகொண்டு வருவீர்கள் ராஷ்மிகா என்பது போல விமர்சித்து வந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் இது போலியான மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்று தெரியாமல் இருந்த நிலையில், சிலர் அது மார்பிங் செய்ய பட்ட வீடியோ என கூற ராஷ்மிகாவின் பெயர் அப்படியே ட்ரெண்ட் ஆக தொடங்கிவிட்டது.

கொந்தளித்த அமிதாப்பச்சன்

கவர்ச்சியும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்! நடிகை ராஷ்மிகா எடுத்த அதிரடி முடிவு?

ராஷ்மிகாவின் பெயர் ட்ரெண்ட் ஆனவுடன் என்ன பிரச்சனை என்று கவனித்த நடிகர் அமிதாப் பச்சன் “இது முற்றிலும் மார்பீங் செய்யப்பட்ட வீடியோ இப்படியான ஒரு வீடியோவை எடிட் செய்து வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என மிகவும் கோபத்துடன் கூறியிருந்தார். இவர் இப்படி கூறியவுடன் ரசிகர்கள் பலரும் ராஷ்மிகா பற்றி இப்படியான வீடியோவை எடிட் செய்தவருக்கு தக்க தண்டனை கொடுக்கவேண்டும் என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ராஷ்மிகா வருத்தம்

மார்பீங் வீடியோ குறித்து நடிகை ராஷ்மிகா வருத்தத்துடன் தனது சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை வெளியீட்டு இருக்கிறார். அதில் ” ஆன்லைனில் பரப்பப்படும் அந்த மார்பீங் வீடியோவைப் பற்றி பேசிய ஆகவேண்டும். இதனை பற்றி பேசும்போதே எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒரு தொழில் நுட்பம் இப்படியான விஷயத்தில் தவறாக பயன்படுத்தியது குறித்து மிகவும் வேதனையாக இருக்கிறது.

இன்று நான் ஒரு நடிகையாக இருந்ததால் என்னால் இந்த பிரச்சனையை இப்போது சமாளித்து விட முடிகிறது. இதுவே நான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது இப்படியானால் நடந்திருந்தால் என்னால் எப்படி சமாளித்து இருக்க முடியும் இரு கனவில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை. இந்த மாதிரி முகம் மற்றும் தொழில் நுட்பத்தால் பலரும் பாதிக்கப்படுவதற்கு முன்பு இதனை பற்றி மற்றவர்களுக்கு தெரிய படுத்த வேண்டும்” எனவும் நடிகை ராஷ்மிகா வருத்தத்துடன் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05122024
vijaya (21) (1)
T. M. Anbarasan
Pattinampakkam Youngster Died
rohit ravi shastri
gold price dec 5
Pushpa 2 Twitter Review