உரிய அனுமதி பெறாததால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேப்டன் மில்லர் படப்பிடிப்பு, அதே இடத்தில் இன்று மீண்டும் தொடங்குகிறது.
நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ என்ற அதிரடி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது, இன்னும் சில வாரங்களில் படம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தின் வனப்பகுதியில் நடைபெற்று வந்த, ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முக்கிய படப்பிடிப்பு முறையான அனுமதி பெறாததால் நிறுத்தப்பட்டது. அதாவது, தென்காசி மாவட்ட மக்கள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் விதிகளை மீறியதாகக் கூறி, ‘கேப்டன் மில்லர்’ படக்குழுவுக்கு எதிராக, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.
இந்நிலையில், தொடர் புகார்கள் வந்ததால், கேப்டன் மில்லர் படப்பிடிப்பை மாவட்ட ஆட்சியர் நிறுத்துமாறு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, படப்பிடிப்பிற்கான தேவையான நடவடிக்கைகளை தயாரிப்பாளர்கள் எடுத்துள்ளனர். எனவே, ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு அதே இடத்தில் மீண்டும் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் படத்தின் முதல் சிங்கிள் அல்லது டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…