ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!
ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில், விருந்தினர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும் ரன் வேகத்தை குறைக்காமல் விளையாடி பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 219 ரன்கள் சேர்த்தது.
பஞ்சாப் அணி சார்பில் ஆர்யா (9), பிரப்சிம்ரன் சிங் (21) மிட்செல் ஓவன்(0) என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஆனால் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய நேஹல் வதேரா (70) அரைசதம் அடித்து அசத்தினார். அவருக்கு துணையாக ஷசாங்கும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், குவேனா மபாகா, ரியான் பராக், ஆகாஷ் மத்வால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, முதல் ஓவரிலேயே அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், குவேனா மபாகா, ரியான் பராக், ஆகாஷ் மத்வால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே 4,0,4,4,6,4 என 22 ரன்களை விளாசினார் ஜெய்ஸ்வால். 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடும் ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கம் கொடுத்து நம்பிக்கை கொடுத்தார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், வைபவ் சூரியவன்சி அதிரடியால் அந்த அணி 2.5 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது.
6 ஓவர்கள் முடிவில் அந்த அணி 89 ரன்கள் குவித்துள்ளது. இதனால், 220 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் எளிதில் எட்டிப் பிடிக்க வாய்ப்புள்ளது.ஹெட்மையர் 12 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் ராஜஸ்தான் தோல்வியை தழுவியது.