RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும் ரன் வேகத்தை குறைக்காமல் விளையாடி பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 219 ரன்கள் சேர்த்தது.

RR vs PBKS

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணி, ஷ்ரேயாஸ் ஐயரின் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியுடன் மோதுகின்றது. இன்றைய போட்டி பஞ்சாப் அணிக்கே மிகவும் முக்கியமான போட்டி.

ஜெய்ப்பூரில் தற்போது நடைபெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங் செய்ய வந்த பஞ்சாப் கிங்ஸ் பவர்பிளேக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய பஞ்சாப் அணி வீரர் நேஹல் வதேரா 70 ரன்கள் அடித்தார்.

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும் ரன் வேகத்தை குறைக்காமல் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. ஆர்யா(9), பிரப்சிம்ரன் சிங் (21) மிட்செல் ஓவன்(0) என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஆனால் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய நேஹல் வதேரா அரைசதம் அடித்து அசத்தினார். கேப்டன் ஸ்ரேயஷ் 30 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நேஹல் வதேராவை, ஆகாஷ் மத்வால் இறுதியில் ஆட்டமிழக்கச் செய்தார். அவுட் ஆவதற்கு முன், வதேரா 37 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 70 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவருக்கு துணையாக ஷசாங்கும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

ஷஷாங்க் 30 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே நேரத்தில் உமர்சாய் ஒன்பது பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. இப்பொழுது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி களமிறங்க போகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்