GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?
நெதர்லாந்தில் GT 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் கார் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து ஏற்பட்டபோது, அஜித் காயமின்றி உயிர் தப்பினார்.

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். ஐரோப்பா GT4 கார் பந்தய போட்டியின்போது அஜித் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்து விபத்தில் சிக்கியது. டயர் வெடித்து காரில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்படவே காரை அஜித் நிறுத்தினார்.
சுதாரித்துக் கொண்டு உடனடியாக காரை கச்சிதமாக நிறுத்தியதால் காயத்தில் இருந்து அஜித் தப்பினார். பின்னர், கார் ட்ராக் சர்க்யூட்டில் நின்ற பிறகு, டயர் மாற்றப்பட்டு மீண்டும் பந்தயத்தில் அஜித் பங்கேற்றார். தற்பொழுது, கார் டயர் வெடித்து விபத்து நடந்த போது, நிலைதடுமாறி நின்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Race-ல் பாதியில் நின்ற AK-வின் Car❗😱 | #AjithKumarRacing
#AjithKumarRacing #ajithkumar #michelinmotogp #italy #24hseries #qualifyingsessions #motorsport #goodbadugly pic.twitter.com/3B02e1bxiP
— Cineulagam (@cineulagam) May 18, 2025
கடந்த சில மாதங்களுக்கு முன் வேறு ஒரு ரேஸில் அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற போட்டியில், 3-ஆவது சுற்றை ஒரு நிமிடம் 48 விநாடிகளில் கடந்து பெர்சனல் பெஸ்ட் நேரத்தைப் பதிவு செய்தார்.