திரைப்பிரபலங்கள்

ரஜினிகிட்ட கேள்வி கேட்க எவனுக்கும் அருகதை கிடையாது! கொந்தளித்த பிரபல நடிகர்?

Published by
பால முருகன்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க சென்றபோது காரில் இருந்து இறங்கி வேகமாக  அவருடைய காலில் விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு விளக்கம் கொடுத்த ரஜினி ”  வயது குறைவானவராக இருந்தாலும் யோகிகள், சன்னியாசிகள் காலில் விழுந்து வணங்குவது என்னுடைய வழக்கம். நான் அதைத்தான் செய்தேன்” என விளக்கம் கொடுத்திருந்தார். 

இந்நிலையில், இன்னும் இதுகுறித்து பல பிரபலங்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரபல மூத்த நடிகரான ஒய்.ஜி.மகேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது “ரஜினிகிட்ட கேள்வி கேட்க எவனுக்கும் அருகதை கிடையாது என மிகவும் காட்டத்துடன் பேசியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் ” ரஜினிகாந்த் சினிமாவில் நமக்கு பிடித்தமாதிரி நடிக்கவில்லை என்றால் அப்போது அவரிடம் கேள்வி கேட்கலாம் மற்றபடி ஆன்மிகம் என்பது அவருடைய தனிப்பட்ட விஷயம் அதில் கேள்வி கேட்க எவனுக்கும் அருகதை கிடையாது. அப்படியெல்லாம் அவரிடம் கேட்பது என்பது பைத்தியக்காரதனமான ஒரு செயல்.

ரஜினி எதாவது செய்து அதை சுரண்டினால் தான் நாம் பிரபலமாகலாம் என்று சிலர் இப்படி செய்து ரஜினியுடைய தனிப்பட்ட விஷயங்களை விமர்சித்து பிரபலமாகிறாரகள். குறிப்பாக எனக்கு ரஜினியை எந்த அளவிற்கு பிடிக்குமோ அதே அளவிற்கு சத்யராஜை பிடிக்கும். என்னுடைய நெருங்கிய நண்பர்களில் அவரும் ஒருவர்.

அவரும் என்னிடம் பலமுறை சும்மா இருங்க  ஆன்மிகம் என்று சொல்லவிட்டு நீங்கள் நேரத்தை வெஸ்ட் பண்றீங்க என்று அவரிடம் ரஜினியிடம் கேட்கும் கேள்வி மாதிரி கேட்கமுடியுமா? எனவே என்னை பொறுத்தவரை ஒருவருடைய தனிப்பட்ட விஷயங்களை பற்றி கேள்விகேட்க கூடாது. ஒரு நடிகரை நடிகனாக பாருங்கள்.

எம்.ஆர்.ராதா சொன்னது போல ஏண்டா எங்களை தெய்வமாக பார்க்கிறீர்கள்? நாங்கள் நடிக்கும் படங்களை மட்டும் பாருங்கள் அதைத்தான் நானும் அனைவர்க்கும் சொல்கிறேன் என ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து பேசிய அவர் ” ஜெயிலர் படத்தை நான் பெரிதாக பாராட்ட மாட்டேன் குறிப்பாக படம் ரஜினி படம் போல இருக்காது ரஜினியை வேறு விதத்தில் இயக்குனர் காமித்து இருப்பார்.

அதனால் படத்தை பார்த்தவுடன் எனக்கு இயக்குனரை தான் மிகவும் பிடித்தது. என்னுடைய முதல் மார்க் அவருக்கு தான். படத்தை பார்த்துவிட்டு ரஜினிக்கு கால் செய்து இயக்குனர் செய்த வேலைகளை பற்றி தெளிவாக கூறி பாராட்டினேன்” எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒய்.ஜி.மகேந்திரன் ரஜினியுடன் ஊர்க்காவலன், அபூர்வ ராகங்கள், முரட்டு காளை, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago