sj surya aasai movie [Image source : file image]
நடிகர் எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்பொழுது நடிகராக கலக்கி வருகிறார் என்றே கூறலாம். இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை திரைப்படம் வரும் ஜூன் மாதம் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் ஊடகத்திற்கு கொடுக்கும் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அவருடன் சக நடிகரான மாரிமுத்துவும் கலந்துகொண்டார்.
அந்த பேட்டியில் நடிகர் மாரிமுத்து நாய்க்குட்டியை காப்பாத்த எஸ்.ஜே.சூர்யா செய்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால், அஜித் நடிப்பில் வெளியான ஆசை திரைப்படத்தில் அஜித் கதாநாயகிக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசாக கொடுப்பார். அந்த நாய் குட்டி டெல்லிக்கு செல்லவேண்டும், டெல்லியில் தான் அந்த நாய்க்குட்டியை வைத்து படம் எடுக்கப்போகும் காட்சி இருந்தது.
எனவே, படக்குழுவினர் எஸ்.ஜே.சூர்யா கையில் ரயிலுக்கு, பணமும் கொடுத்துவிட்டு நாய்க்குட்டியை டெல்லிக்கு கொண்டு வர சொல்லிவிட்டார்கள். உடனடியாக எஸ்.ஜே.சூர்யா எதைப்பற்றியும் யோசிக்கவே இல்லை. போற வழியிலேயே பாத்திரம் கடையில் ஒரு வாலி பாத்திரம் வாங்கிவிட்டார். அதைப்போலவே நாய்க்குட்டிக்கு பால் வாங்கிவிட்டு ரயிலில் ஏறி சென்றுவிட்டார்.
கிட்டத்தட்ட இரண்டு நாள் இரவு ரயிலில் நாய்க்குட்டியை வைத்துக்கொண்டே இருந்துள்ளார். பிறகு உயிருடன் அந்த நாய்குட்டியை கொண்டு படக்குழுவினரிடம் கொடுத்துவிட்டார். அங்கு எல்லாரும் நாய்குட்டிக்காக தான் காத்திருந்தார்கள். சரியான நேரத்தில் நாய்க்குட்டியை கொண்டு சேர்த்துவிட்டார். இது மிகப்பெரிய சாதனை” என மாரிமுத்து கூறியுள்ளார். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் என்னா மனுஷன் யா” என எஸ்.ஜே.சூர்யாவை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…