SJ Suryah [Image source : file image]
இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்பொழுது நடிகராக கலக்கி வருபவர் எஸ்.ஜே.சூர்யா இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மிரட்டி வருகிறார். கடைசியாக இவர் வில்லனாக நடித்த மாநாடு திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று இருந்தது.
அதனை தொடர்ந்து தற்பொழுது இவர் பல படங்களில் வில்லனாக நடிக்க கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இவர் ஏற்கனவே விஷால் நடித்த வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்திலும் ராம் சரணுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.
அதைப்போல, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜிகிர்தாண்டா திரைப்படத்திலும் ராகவலரன்ஸ்க்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்த படங்களை தவிர்த்து தற்போது பரவும் தகவல் என்னவென்றால் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் கமல்ஹாசனுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யாவிடம் தான் நடித்து வருகிறாராம்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்களில் நான் நடித்துவருகிறேன். இந்த படங்களை தவிற இன்னொரு பெரிய படம் இருக்கிறது” என கூறியுள்ளார். இதன் மூலம் அவர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது என கோலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. மேலும், சிலர் அவர் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்கிறார் எனவும், லியோ படத்தில் நடிக்கிறார் எனவும் கூறி வருகிறார்கள்.
எஸ்.ஜே. சூர்யா தொடர்ச்சியாக பெரிய படங்களில் வில்லனாக நடிக்க கமிட் ஆகியுள்ள காரணத்தால் அவருடைய மார்க்கெட் கண்டிப்பாக உச்சத்தில் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை திரைப்படம் வரும் ஜூன் 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…