KAVIN -College Super Stars [file image]
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, கவின் நடிக்கும் ஸ்டார்திரைப்படத்தின் “காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்” என்ற முதல் பாடல் வீடியோவை படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடிய, இந்த பாடலுக்கு மதன் கார்க்கி கல்லூரி சூப்பர் ஸ்டார்களுக்கான பாலிடால் வரிகளை எழுதியுள்ளார்.
பிக் பாஸ் புகழ் கவின் என்ற பெயர் போய், இப்பொது ‘டாடா’ பட நடிகர் கவின் என்று அழைக்கப்படும் கவின் தற்பொழுது, பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான இளன் இயக்கத்தில் “ஸ்டார்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ரஜினி பிறந்தநாளில்…’ஸ்டார்’ படத்தின் மாஸ் அப்டேட்.! வெளியான போட்டோ ஆல்பம்…
இதன் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், முதல் பாடல் வெளியாகியுள்ளது. முன்னதாக, படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் அறிவிக்கும் வகையில், படத்தின் போட்டோ ஆல்பம் என்ற பெயரில் ஒரு வெடியோவை வெளியிட்டு இருந்தனர். அதில், ரஜினி கமல், விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தது. படக்குழு அறிவித்தபடி, ‘காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்’ பாடலை வெளியிட்டனர்.
கல்லூரி காதல் கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தில், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்ய, வினோத் ராஜ் குமார் என் கலை இயக்குனராகவும், பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…