Rathnam [file image]
Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் படம் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் எந்த இயக்குனருடன் இணைந்து எந்த மாதிரி படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், அவர் ஏற்கனவே, தாமிரபரணி, பூஜை ஆகிய ஹிட் படங்களில் நடித்து இருந்த இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்கிற படத்தில் நடித்தார்.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுடைய கூட்டணி இந்த படத்தில் இணைந்த காரணத்தால் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தார். முரளி சர்மா, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. படம் விமர்சன ரீதியாக கவலையான விமர்சனத்தை தான் பெற்று கொண்டு வருகிறது. படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள் எல்லாம் நன்றாக இருப்பதை கூறி வருகிறார்கள்.
விமர்சனங்கள் கலவையாக கிடைத்து வருவதன் காரணமாக படத்தின் வசூலும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதன்படி, படம் வெளியா முதல் நாளில் உலகம் முழுவதும் 3.57 கோடி வசூல் செய்து இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது நாளில் 2 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது எனவும் மொத்தமாக 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…