MKumaran Part-2 [File image]
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’. இந்த திரைப்படத்தில் நதியா, அசின் தொட்டும்கல், பிரகாஷ் ராஜ், விவேக், ஜனகராஜ், சுப்பாராஜு, ஓ. எ. கே. சுந்தர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருந்தார்.
இந்த திரைப்படம் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘அம்மா நன்னா ஒ தமிழா அம்மாயி’ என்ற படத்தினுடைய தமிழ் ரிமேக் தான். ரீமேக் என்றாலும் தெலுங்கை விட தமிழில் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு ஹிட் ஆனது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட வசூல் ரீதியாக மட்டும் இந்த திரைப்படம் 54 கோடி வரை வசூல் செய்திருந்தது.
அதிக சம்பளம் கேட்டு கங்குவா படத்தின் வாய்ப்பை இழந்த பாகுபலி நடிகர்?
இந்நிலையில், படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்படவுள்ளதாம். இந்த இரண்டாவது பாகத்திற்கான கதை எல்லாம் எழுதி முடித்துவிட்டதாகவும், இந்த இரண்டாவது பாகத்தில் நதியாவின் கதாபாத்திரம் இடம்பெறாது எனவும் இயக்குனர் மோகன் ராஜா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “எம்.குமரன் பார்ட்-2-க்கான ஸ்கிரிப்டை எழுதிவிட்டேன், விரைவில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். ஆனால், நதியாவின் கதாபாத்திரம் படத்தில் இடம்பெறாது” என தெரிவித்துள்ளார். இந்த இரண்டாவது பாகத்திலும் ஹீரோவாக நடிகர் ஜெயம் ரவி தான் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி இரண்டாவது பாகம் உருவாவதை போல மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன தனி ஒருவன் இரண்டாவது பாகமும் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி 2 எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…