நடிகர் அஜித்குமார் “வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஹெச்,வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.
அஜித் -ஹெச் வினோத் -போனிகபூர் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இது. நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களை தொடர்ந்து மூவரும் கூட்டணி அமைத்துள்ளனர். படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் 25 கிலோ உடல் எடையை குறைக்கவுள்ளார். நேற்று முன்தினம் கூட ஆயுர்வேத சிகிச்சைக்கை செய்துவிட்டு கேரளாவில் உள்ள குருவாவூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில், AK 61 படம் குறித்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் -6 ஆம் தேதி ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.மேலும், பூஜை நடந்து முடிந்த பிறகு படத்தின் டைட்டில் அறிவிக்கப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…