சிறகடிக்க ஆசை சீரியல்.. முடிவுக்கு வரும் போட்டி.. ஜெயிக்கப் போகும் அந்த சிறந்த ஜோடி யார் தெரியுமா?

Published by
K Palaniammal

சென்னை – சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [ஆகஸ்ட்  14]விறுவிறுப்பான காட்சிகள்..

எல்லாருமே சூப்பரா விளையாடிட்டு இருக்கீங்க அப்படின்னு போட்டி நடத்துறவங்க சொல்றாங்க.. இந்த ரவுண்டுல ஆண்கள் மட்டும் தான் கலந்துக்க போறீங்க அதனால எல்லாருமே ஸ்டேஜுக்கு வாங்கன்னு கூப்பிடுறாங்க.. இப்போ அதுல ஒரு நடுவர் கேள்வி கேக்குறாங்க.. உங்க அம்மாவும் மனைவியும் ஆபத்தான இடத்துல மாட்டிகிட்டாங்க ..நீங்க அந்த வழியா வண்டில போறீங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் தான் நீங்க கூட்டிட்டு போக முடியும் அப்போ நீங்க யாரை கூட்டிட்டு போவீங்க..? இந்த கேள்விக்கு கிட்டத்தட்ட எல்லாருமே என் வைஃப் தான் கூட்டிட்டு போவேன்னு பதில் சொல்றாங்க .

ஆனா நம்ம முத்து மட்டும் கொஞ்சம் வித்தியாசமா சொல்றாரு ..என் பொண்டாட்டி நல்லா பைக் ஓட்டுவா அவ கிட்ட வண்டியை கொடுத்து  அம்மாவை கூட்டிட்டு போக சொல்லுவேன். நான் அங்கே வெயிட் பண்ணுவேன் என் பொண்டாட்டி திரும்பவும் எனக்காக வருவா அப்படின்னு சொல்றாரு.. இப்போ அடுத்த கேள்வி கேக்குறாங்க ஒரு திருப்திகரமான வாழ்க்கை வாழ எது அவசியம்..? இத உங்க பார்ட்னர் கிட்ட கலந்து யோசிச்சுட்டு சொல்லலாம் அப்படின்னு சொல்லிடுறாங்க. இப்ப மனோஜும்  ரோகிணியும் தனியா போயி டிஸ்கஸ் பண்றாங்க.. அதுல மனோஜ் சொல்றாரு சுத்தி இருக்கிறவங்களுக்கு நல்லது பண்ணனும் அடுத்தவங்களுக்காக வாழனும் அப்படின்னு சும்மா சொல்லலாம் ரோகிணி அப்பதான் மார்க்கும் கிளாப்ஸ்சும்  நமக்கு கிடைக்கும்னு சொல்றாரு..

முத்து மீனாகிட்ட  அந்த இடத்துல என்ன தோணுதோ அதை பேசலாம்னு  சொல்லிறாரு.. இப்போ பதில் சொல்ல நடுவர்கள் கூப்பிடுகிறார்கள்.. ஃபர்ஸ்ட் ரவியும் சுருதியும் சொல்றாங்க.. புடிச்ச இடத்துக்கு போகணும் நல்லா சாப்பிடணும்னு சொல்றாங்க.. மனோஜ் சொல்றாரு எங்களுக்காக வாழ்றத  விட மத்தவங்களுக்காக வாழ்வதுதான் திருப்தி அப்படின்னு சொல்றாரு. முத்து சொல்றாரு சாப்பாட்டுல மட்டும்தான் சார் திருப்தி கிடைக்கும். மனுஷங்களுக்கு என்ன கிடைச்சாலும் போதும்னு எண்ணமே வராது .புதுசா ஒரு தேவையை ஏற்படுத்திகிட்டே இருப்போம். அதுல சின்ன சின்ன விஷயங்கள் தான் நமக்கு திருப்தியை திருப்தி படுத்தும்  அப்படின்னு மீனா சொல்றாங்க. நம்ம பொழப்பு நிற்காமல் ஓடுனாலே  திருப்தி தான் சார் அப்படின்னு முத்து சொல்றாரு..

இப்போ அடுத்த கேள்வி கேக்குறாங்க யார் ஃபர்ஸ்ட் சாரி கேப்பிங்க ?.. இதுக்கு ரவி சொல்றாரு நான் தான் சார் என் வைஃப் கிட்ட சாரி கேட்பேன்  வைஃப் வாயிலிருந்து ஷெரீ ன்னு வருமே தவிர சாரி மட்டும் எப்பவுமே வராது அப்படின்னு சொல்லவும்  எல்லாருமே சிரிச்சிடுறாங்க.. இப்ப மனோஜூம்  ரோகினியும்  சொல்றாங்க நாங்க எங்களுக்குள்ள சண்டையே போட்டுக்க மாட்டோம் விட்டுக் கொடுத்துட்டு போவாம் . இப்போ முத்து  சொல்றாரு சார் போர்ல நடந்த சண்டையை விட எங்களுக்குள்ள நடந்த சண்டை தான்  அதிகம். ஆனா நாங்க அந்த சாரி பபூரிலாம்  எல்லாம் கேக்கமாட்டோம் .மீனா சொல்றாங்க ஆமா சார் நாங்க சாரி சொல்லிக்க மாட்டோம்  ஆனா அவருக்கு புடிச்சத சமைச்சு கொடுப்பேன்.. அதிலேயே ரெண்டு பேரும் பேசிருவோம் அப்படின்னு சொல்றாங்க.

இப்போ நடுவர்கள் தீர்ப்பு சொல்ல தயாராயிட்டாங்க.. எல்லாருமே ஆவலோடு காத்திட்டு இருக்காங்க. அதுல ஒரு நடுவர் சொல்றாரு எல்லாருமே இந்த பரிசு வாங்குவதற்காக பதில் சொல்லி இருக்கீங்க.. உடனே மனோஜ் சொல்றாரு நீங்க கேட்ட கேள்வியே தப்பு.. இப்போ அதுல ஒரு நடுவர் மனோஜ் ரோகினையும் டிஸ்கஸ் பண்ண ரெக்கார்ட போட்டு காட்றாங்க. மனோஜ்க்கு ரொம்ப அசிங்கமா இருக்கு.. நான் குடும்ப நல கோர்ட்ல  நீதிபதியை   இருந்திருக்கிறேன்.  புருஷன் பொண்டாட்டிகுள்ள  சண்டையே வராதுன்னு நீங்க சொன்னீங்க. இது என்னால ஏத்துக்க முடியாது சண்டை வரணும் இல்லனா ரெண்டு பேரும் ஏதோ ரகசியம் வச்சு வாழ்றிங்கன்னு அர்த்தம் அப்படின்னு சொல்றாங்க.

ரவியும் ஸ்ருதியும் இன்னும் லவ்வர்ஸாவே வாழ்ந்துட்டு இருக்கீங்க. நல்ல கப்பல்ஸ்னா  அது முத்துவும் மீனாவும்  தான். அவங்க கிட்ட எந்த ஒரு போலித்தனமும் இல்லை. அவங்களுக்கு தான் இந்த அவார்டு கொடுக்கப் போறோம்  அப்படின்னு சொல்லி முத்து மீனாவுக்கு பரிசை கொடுக்குறாங்க.. இப்போ விஜயா வீட்ல ஆரத்தி கரச்சி ரெடியா இருக்காங்க.. மனோஜ் போறாரு உங்களுக்காக தான் காத்துட்டு இருந்தேன் ஜெயிச்சிட்டீங்களா அப்படின்னு கேக்குறாங்க. இல்ல ஆண்டி  நாங்க ஜெயிக்கல அப்படின்னு ரோகினி சொல்றாங்க. இப்போ ரவியும் வராரு பரவா இல்லையே சின்ன வயசுலயே சிறந்த ஜோடினு  பெயர் வாங்கிட்டீங்கன்னு சொல்றாங்க. ரவியும் இல்ல மா நாங்க ஜெயிக்கலை  அப்படின்னு சொல்றாங்க

உடனே விஜயா  ஷாக்கா அப்புறம் யாரு ஜெயிச்சா அப்படின்னு கேக்குறாங்க .. இப்போ மேளதாளத்தோட முத்துவும்  மீனாவும் வராங்க.. இதோட இன்னைக்கு  எபிசோட் முடிந்தது. நாளைக்கு  ப்ரோமோல முத்துவும் மீனாவும் போட்டியில் நடந்ததை அண்ணாமலை கிட்ட சொல்லிட்டு இருக்காங்க அப்போ  முத்து சொல்றாரு அப்பா புருஷன் பொண்டாட்டிகுள்ள  சண்டையே வரலைன்னா அவங்களுக்குள்ள ஏதோ ரகசியம் இருக்குன்னு அர்த்தமா அப்படின்னு அந்த ஜர்ச்சம்மா  சொன்னாங்க .. இதைக் கேட்டு மனோஜ் ரோகினியும்  முழிச்சிட்டு இருக்காங்க.. இனிமேலாவது ரோகினி  உண்மைய மனோஜ் கிட்ட சொல்லுவாங்களான்னு வரப் போற எபிசோடில் பார்ப்போம்.

Published by
K Palaniammal

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

7 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

8 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

9 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

10 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

10 hours ago