”காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!
பயிற்சி முடித்து பணியில் சேரும் காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை, வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் இன்று (ஜூலை 18, 2025) நடைபெற்ற காவல் துணை கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
இந்த விழாவில் அணிவகுப்பு மரியாதையை டிஜிபி சங்கர் ஜிவால் ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் பயிற்சி முடித்த காவல் துணை கண்காணிப்பாளர்கள் திறம்பட பணியாற்ற வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், காவலர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். காவல் பணி என்பது மக்களின் பிரச்சனைகளை நேரடியாக தீர்க்கும் உன்னதமான பணி எனக் குறிப்பிட்டு, மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்று பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!
July 18, 2025