பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் மொழியை விட்டுக்கொடுக்காமல் பல இடங்களில் பெருமையாக பேசுவார். அதைப்போல தமிழில் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடந்தால் கூட அங்கு ஹந்தியில் பேசினால் தமிழில் பேச கூறுவார். அந்த அளவிற்கு தமிழ் மீது தீராத பற்றுக்கொண்டவர் இவர்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் தனது மனைவி சாய்ரா பானுயுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. மேடையில் விருது வாங்கிய ரஹ்மான் தொகுப்பாளரிடம் பேசி கொண்டிருந்தபோது, அவரது மனைவி சாய்ரா பானுவை மேடைக்கு பேச வரும்படி அழைத்தனர்.
இதனைதொடர்ந்து, மேடைக்கு வந்த ரஹ்மான் மனைவி முதலில் இந்தியில் பேசினார். அப்போது அவரை
இடைமறித்த ஏ.ஆர் .ரஹ்மான் இந்தி வேணாம்..தமிழில் பேசு என செல்லக்கட்டளை இட்டார். அவர் அப்படி கூறியதும் கூட்டத்தில் பலத்த கோஷம் எழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…