priyanka deshpande pooja venkat [file image]
சென்னை :சின்னத்திரையில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சனை பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னை வேலையை செய்ய விடாமல் அவருடைய ஆதிக்கத்தை செலுத்திய காரணத்தால் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக மணிமேகலை அறிவித்திருந்தார்.
இதன் காரணமாக தான் தற்போது சின்னத்திரையே பற்றி எரியும் தீயை போல இந்த விவகாரம் பேசும்பொருளாகியுள்ளது. இவர்களுடைய பிரச்சனைகள் குறித்து சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான பாடகி பூஜாவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் கூறியதாவது “மற்றவரை வெறுக்காமல் ஒருவரை எப்படி நேசிப்பது என்று மக்கள் நினைக்கிறார்களா? வெட்கப்படாமலோ அல்லது கொடூரமான மொழியைப் பயன்படுத்தி மகரந்தச் செடியை வீழ்த்தாமலோ உங்களுக்குப் பிடித்த நபரை நீங்கள் ஆதரிக்கலாம்.
ஒரு சில மணிநேரங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பதன் மூலம் நீங்கள் யாரையும் தெரிந்து கொள்ள முடியாது. நான் என்ற வார்த்தைகளை நாம் எப்படி கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், உண்மை என்னவென்று தெரியாமல் ஒருவரை அவமானப்படுத்துவது எவ்வளவு பெரிய மோசமான விஷயம் என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்க விரும்புகிறேன். உங்கள் எண்ணங்களை பாதிக்க சமூக ஊடகங்களுக்கு அதிக சக்தி உள்ளது, ஆனால் என்னவென்று உங்களுக்கு முழுமையாக தெரியாமல் இருக்கலாம்.
எனவே,உங்கள் தளத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும் தயவு செய்து கிண்ட் ஆக கற்றுக்கொள்ளுங்கள்
தாமதமாக வருவதை நிறுத்துங்கள்! நீங்களும் நானும் இதில் ஒரு நாள் கூட இருக்க மாட்டோம் என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள் பயங்கரமான சூழ்நிலை.
ஏற்கனவே, நமது தனிப்பட்ட வாழ்க்கையில் போராடுவதற்கு நிறைய பலம் தேவைப்படுகிறது, தயவுசெய்து மற்றொரு நபரின் சோகத்திற்கு காரணமாக இருக்காதீர்கள். தயவு செய்து யாருடைய வாழ்க்கையையும் நடத்தும் வாய்ப்பாக பார்க்க வேண்டாம். தயவு செய்து ஒருவரை காயப்படுத்த வேண்டுமென்றே முயற்சி எடுக்காதீர்கள்.
உங்களால் அன்பைப் பரப்ப முடியாவிட்டால், குறைந்தபட்சம் எல்லா இடங்களிலும் வெறுப்பைப் பரப்புவதை நிறுத்துங்கள்” எனவும் கூறியுள்ளார். பட்டும் படாமலும், அவர் தெரிவித்துள்ள கருத்து நெட்டிசன்கள் கலாய்க்கும் வகையில் அமைந்துள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோதே பிரியங்கா மற்றும் பூஜா இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது.
அக்கா -தங்கை போல இருவரும் பழகி வந்தனர் என்பதும் தெரிந்த ஒன்று தான். இந்த சூழலில், பிரியங்கா மற்றும் மணிமேகலை விவகாரம் குறித்து பூஜா தெரிவித்துள்ள கருத்து பிரியங்காவுக்கு ஆதரவா? என கேள்விகளை எழுப்பியுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…