ஹன்சிகா : நடிகை ஹன்சிகா திருமணம் முடிந்த பிறகும் சினிமாவை விட்டு விலகாமல் தொடர்ச்சியாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் திகில் திரைப்படமான “காந்தாரி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில், மெட்ரோ ஷிரிஷ், மைல் சாமி, ஸ்டண்ட் சில்வா, வினோதினி, பவன் தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், குடிவேலு முருகன், கலைராணி உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகை ஹன்சிகா திகில் படங்களில் நடித்தார் ஏன்றால் அந்த படத்தின் மீது எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதற்கு உதாரணம் அவருடைய நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன அரண்மனை படத்தினை கூறலாம். படத்தில் த்ரில்லிங் ஆன கதாபாத்திரத்தில் நடித்து நம்மளை மிரட்டி விட்டு இருப்பார்.
இந்த காந்தாரி படமும் அந்த அளவுக்கு த்ரிலிங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது ஹன்சிகா போஸ்டரை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். காந்தாரி படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அந்த போஸ்டரில் நடிகை ஹன்சிகா மிகவும் வயதான தோற்றம் கலந்த வித்தியாசமான லுக்கில் இருந்தார்.
இதனை பார்த்த பலரும் என்னங்க சொல்லுறீங்க ஹன்சிகா வா இது? என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் போஸ்டரை பார்த்த சிலர் ஹன்சிகா லூக் நன்றாக இல்லை எனவும் கூறி வருகிறார்கள்.
மேலும், இந்த திரைப்படத்தில் நடிகை ஹன்சிகா தொல்லியல் துறை அதிகாரியாகவும், பழங்கால பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் பெண்ணாகவும் நடிக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…