chinmayi babies File Image]
பிரபல பாடகி சின்மயி விபத்து ஒன்றில் சிக்கி கொண்டதாக தனது X தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகிகளில் ஒருவரான சின்மயி, ஏ. ஆர். ரகுமான் இசையயில் இவர் பாடிய முதல் பாடல் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’. இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று அடுத்தடுத்த பாடும் வாய்ப்புகள் கிடைத்தது.
கடந்த 2014ல் நடிகர் மற்றும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை மணந்தார். திருமணமாகி நீண்ட ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி, சின்மயி தனது இரட்டை குழைந்தைகளான டிரிப்தா மற்றும் ஷர்வாஸ் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பெற்றுக் கொண்டதாக வதந்திகள் பரவியது. ஆனால், அந்த குழந்தைகள் பற்றி பரவிய தவறான வதந்திகளுக்கு முறையான விளக்கத்தை அளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
இவர், பின்னணி பாடகி மட்டும் மல்லாமல் டப்பிங் கலைஞரும் ஆவார். கடைசியாக, நடிகை சமந்தா நடித்த யசோதா, குஷி ஆகிய திரைப்படங்களுக்கு ஹிந்தி மற்றும் தெலுங்கு வெளியீடுகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். இவர், நடிகை சமந்தாவின் நெருங்கிய நண்பர் என்றே கூறலாம்.
இந்நிலையில், நேற்று மாலை விபத்து ஒன்றில் சிக்கி கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இது குறித்து தனது பதிவில், தன் குழந்தைகளுடன் காரில் சென்றுகொண்டிருக்கும் போது, குடிபோதையில் வந்த ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் வந்து தனது கார் மீது மோதிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனது காரை இடித்துவிட்டு நிற்காமல் ஆட்டோ தப்பித்தும் சென்றுவிட்டது. ஆனால், விபத்தின்போது, ஆட்டோ ஓட்டி வந்த நபருக்கும் ஒன்றும் ஆகவில்லை, தங்களுக்கும் ஒன்றும் ஆகவில்லை என தெரிவித்ததோடு, “நாங்கள் பத்திரமாக தப்பித்ததை நினைத்து மகிழ்ச்சியடைகின்றோம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்” என்று தனது குறிப்பில் சின்மயி குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…