atlee [FILEIMAGE]
தமிழ் சினிமாவில் தனது தனித்துவ கதைகள் மூலம் மிகவும் பிரபலமான அட்லீ, இப்பொது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். தற்போது, அட்லீ இயக்கியுள்ள ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், இவரது கடந்த கால திரைப்படங்களின் வசூலை பற்றி ஒரு பார்வை பார்க்கலாம். அதாவது, சினிமாவில் அறிமுக இயக்குனரின் படத்தின் கதைகள் நன்றாக அமைந்தால், வெற்றி அடைவதில் மாற்றமே இல்லை. அந்த வகையில், தனது திரை வாழ்க்கையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அட்லீக்கு தனது முதல் இயக்கமான அறிமுக படமே நல்ல வரவேற்பு கிடைத்து, வசூலை பெற்று தந்தது. அதன்படி, இந்த திரைப்படம் ரூ.13 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 25 நாட்களில் ரூ.80 கோடியை வசூலித்திருந்தது. இது அவருக்கான முதல் வெற்றியாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து, தளபதி விஜய்யை வைத்து ‘தெறி’ என்ற படத்தை இயக்கினார்.
விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் யாறலாம் என்றாலும், படத்தின் கதை நன்றாக இருந்ததால், ரூ.75 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இது 2016 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, மீண்டும் விஜய்யுடன் கைகோர்த்து ‘மெர்சல்’ என்ற படத்தை இயக்கினார்.
சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டில் வெளியாகி உலகளவில் 250 கோடி ரூபாய் வசூலித்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக மாறியது. தொடர் வெற்றி காரணமாக, மீண்டும் மூன்றாவது முறையாக விஜய்யுடன் கைகோர்த்து, சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவான பிகில் திரைப்படம் பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று ரூ.300 கோடி ரூபாய் வசூலித்து 2019 இன் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியது.
இப்படி தனது முதல் படத்தின் வெற்றியின் மூலம், தளபதி விஜய் உடன் மூன்று முறை கைகோர்த்து தனது வெற்றியை நிரூபித்து, பாலிவுட்டுக்கு சென்ற அட்லீக்கு ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.80 கோடியில் தொடங்கிய தனது வசூல் வேட்டையை ரூ.300கோடியில் நிற்கும் அட்லீ, ஷாருக்கான் திரைப்படம் மூலம் புதிய சாதனையை எட்டுவார் என்று கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…