‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இணைந்த போராட்டத்தை அடுத்து இந்தி திணிப்பை கைவிடுவதாக பாஜக அரசு பின்வாங்கியது.

uddhav thackeray - Raj Thackeray

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை பாஜக அரசு வாபஸ் பெற்றது. இந்நிலையில், மும்மொழி கொள்கையை பாஜக வாபஸ் பெற்ற நிலையில், போராட்டம் வெற்றி கொண்டாட்டமாக மாறியது.

மும்பையில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே சகோதரர்கள், பிரம்மாண்ட வெற்றி கொண்டாட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டம் வோர்லியில் உள்ள NSCI டோமில் நடைபெற்றது. இந்த இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில், 20 ஆண்டுகளாக எதிர் எதிர் துருவங்களாக இருந்த உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஒரே மேடையில் பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் பேசிய எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரே,” மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம். இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளபோது.

இந்திக்கு இங்கு என்ன தேவை உள்ளது? மகாராஷ்டிராவில் மராட்டியத்திற்கு மட்டுமே முக்கியத்துவம்; ஆனால் பாஜக இந்தியை திணிக்கிறது. இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன. 3ம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? வெறும் 200 ஆண்டுக்கால வரலாறு கொண்ட மொழி இந்தி.

மராட்டியத்தில் இருந்து மும்பையைப் பிரிக்க சதி நடக்கிறது. இந்தியா முழுவதும் மராட்டிய பேரரசர்கள் ஆட்சி செய்தபோது மராத்தியை திணிக்கவில்லை” என்று கூறியிருக்கிறார். பின்னர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிடுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், மராத்தியில் உங்களுக்கு ஏன் பிரச்சனை?” என்று பாஜகவிடம் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

“குஜராத்தில், படேல்கள் துருவப்படுத்தப்பட்டனர், மீதமுள்ளவர்கள் ஒருங்கிணைந்த வாக்கு வங்கியாகப் பயன்படுத்தப்பட்டனர். ஹரியானாவில், ஜாட்கள் தூண்டிவிடப்பட்டனர், மீதமுள்ளவர்களும் வாக்கு வங்கியாகப் பயன்படுத்தப்பட்டனர்.

இந்துத்துவா என்பது ஏகபோக உரிமை அல்ல. நாங்கள் மிகவும் வேரூன்றிய இந்துக்கள். நீங்கள் எங்களுக்கு இந்து மதத்தைக் கற்பிக்கத் தேவையில்லை. 1992 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த கலவரத்தில் இந்துக்களை காப்பாற்றியது மராத்தி மக்கள்தான்” என்று உத்தவ் தாக்கரே பாஜகவை எச்சரித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்