சல்மான் கான் : சமீப காலமாக பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், இன்று சல்மான் கான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, 4 பேரை நவி மும்பை போலீசார் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பிரபல கேங்க்ஸ்டரான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. நவி மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தனஞ்சய், வாஸ்பி கான், ரிஸ்வான் கான் மற்றும் கௌரவ் பாட்டியா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள், மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தின் பன்வேல் பகுதியில் வைத்து சல்மான் கானின் கார் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, லாரன்ஸ் பிஷ்னோய், அன்மோல் பிஷ்னோய், சம்பத் நெஹ்ரா, கோல்டி ப்ரார் உள்ளிட்ட 17க்கும் மேற்பட்டோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சல்மான் கான் கார் மீது, தாக்குதல் நடத்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாகிஸ்தான் முக்கிய ஆயுத சப்ளையர் மூலம் ஆயுதங்களை ஆர்டர் செய்ய திட்டமிட்டிருந்தனர் என்று போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக நவி மும்பை போலீசார் தகவல் தெரிவித்துள்னர்.
கடந்த ஏப்ரல் 14ம் தேதி மும்பையின் பாந்த்ராவில் உள்ள சல்மான் கான் வீட்டிற்கு வெளியே, பைக்கில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்திற்கு பிறகு, இந்த தாக்குதல் திட்டம் செயல்படுத்தவிருந்த நிலையில், போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…