நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மஹா படத்தின் புதிய போஸ்ட்ரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகை, ஹன்சிகா தற்போது நடித்து வரும் திரைப்படம் மஹா. இது ஒரு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாம். இந்த படம் ஹன்சிகாவின் 50வது படமாகும். இந்த படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலிலும், ஸ்ரீகாந்த் வில்லனாகவும் நடிக்கிறார். மேலும் சாயாசிங், நாசர், கருணாகரன் தம்பி ராமையா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். அதனையடுத்து மகத் மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் இந்த படக்குழுவினருடன் புதிதாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை ஜமீல் இயக்குகிறார். இவர் ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லட்சுமணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் ஹன்சிகா காவி உடை அணிந்து புகைப்பிடிப்பது போல் உள்ள தோற்றமாகும்.
மேலும் விமானியாக நடிக்கவிருக்கும் சிம்புவின் போஸ்ட்ரும் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சிம்புவின் கதாபாத்திரம் கோவாவை சேர்ந்த ஒரு விமானியின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிகின்ற வேளையில் இருந்த போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ஹன்சிகாவிற்கு பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹன்சிகாவின் பிறந்தநாள் பரிசாக மஹா படக்குழுவினர் புதிய போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர். கைகளில் ரத்த கறையுடன் நிற்கும் ஹன்சிகாவின் அந்த போஸ்ட்ர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…