Jawan box office [File Image]
பதான் எனும் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்த நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
தமிழும் படம் மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும் என்பதற்காக வில்லனாக நடிகர் விஜய்சேதுபதியையும், ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவும் அட்லீ நடிக்க வைத்தார். படத்தில் அவர்கள் நடித்த கதாபாத்திரமும் கொண்டாடப்பட்டடு பாலிவுட்டிலும் இவர்களுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவது போல் வசூலிலும் படம் பல சாதனைகளை படைத்தது வருகிறது. படம் வெளியான 9 நாட்களில் மொத்தமாக 735 கோடி வரை வசூல் செய்திருந்த நிலையில், அடுத்ததாக 10 நாட்களில் படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜவான் திரைப்படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் 597 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெற்ற வந்த இடம் என்காடு பாடல் வரியை போல வந்த இடம் வசூல் காடு என ஜவான் படம் வசூலை குவித்து வருகிறது. படத்திற்கு இன்னும் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் காரணம் வரும் நாட்களில் இன்னும் வசூல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…