Categories: சினிமா

சன் டிவியின் புதிய காமெடி சமையல் நிகழ்ச்சி… போட்டியாளர்கள் லிஸ்ட்டு இதோ!

Published by
கெளதம்

சென்னை:   சன் டிவியில் ‘டாப் குக்கு டூப் குக்கு’ என்ற புதிய காமெடி சமையல் நிகழ்ச்சி, வரும் 19ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், சமையல் திறமைகளை வெளிப்படுத்தும் போட்டியாளர்களின் இறுதி பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதில், டூப் குக்குகளாக விஜய் டிவி மூலம் பிரபலமான பரத், தீனா, மோனிஷா, ஜி.பி.முத்து உள்ளிட்டோரும், போட்டியாளர்களாக நடிகர்கள் சாய் தீனா, ஃபெப்சி விஜயன், சோனியா அகர்வால், சைத்ரா ரெட்டி, சிங்கம் புலி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் நடுவராக வெங்கடேஷ் பட் செயல்படவுள்ளார்.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்று எடுத்துக்கொண்டால், அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்து 5வது சீசன் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், முந்தைய நிகழ்ச்சி போன்று இந்த நிகழ்ச்சிக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அது காரணமாக தானா? என்னெவென்று தெரியவில்லை, அந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் சமீபத்தில் விலகினார். மேலும் சில கோமாளிகளும் விலகினர, இதனை தெடர்ந்து, அவர்களுக்கு பதிலாக சிலர் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில், குக் வித் கோமாளிக்கு போட்டியாக ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சி தொடங்கவிருக்கிறது. இது தொடர்பான ப்ரோமோக்களை சன் டிவி நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

போட்டியாளர்கள் லிஸ்ட்

  1. சிங்கம் புலி
  2. சுஜாதா
  3. ஷாலி நிவேகாஸ்
  4. ஐஸ்வர்யா தத்தா
  5. நரேந்திர பிரசாத்
  6. சாய் தீனா
  7. சோனியா அகர்வால்
  8. ஃபெப்சி விஜயன்
  9. சைத்ரா ரெட்டி

Published by
கெளதம்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago